இராதே

இராதே
eradevadassou

சனி, 28 நவம்பர், 2026

குண்டு மண்டு

குண்டு மண்டு


குண்டு மண்டு

   ரெண்டு பேரும்

  ' கோலி குண்டும்'

   ஆடுவர் ;

சுண்டிச் சுண்டிக்

   காசைத் தூக்கிப்

   'பூவா ? தலையா ?'

   போடுவர் ;

புண்டி நிறைய

   தின்னுத் தீர்க்கப்

   போட்டக் காசைத்

   தேடுவர் ;

மண்டி யிட்டே

   'பச்சைக் குதிரை'

   தாண்டித் துள்ளல்

   துள்ளுவர் !



வண்டி வண்டித்

   தொடர் வண்டிச்

   சட்டை இழுத்தே

   ஓடுவர் ;

நண்டு நண்டு

   வலைக் குள்ளே

   விரலை விட்டே

   நோண்டுவர் ;

வண்டு வண்டு

   தும்பி வண்டு

   வாலை முடுக்க

   கூடுவர் ;

நொண்டி நொண்டிக்

   கட்டந் தாண்டிச்

   ' சில்லு ஆட்டம் '

   போடுவர் !



சிண்டு பிடிச்சே

   நின்ற படியே

   சண்டித்தனம்

   செய்குவர் ;

மண்டை மண்டை

   முட்டி முட்டி

   மண்ணில் உருண்டே

   புரளுவர் ;

ஒண்டிக் கொண்டி

   நேரே மோத

   முறைப்புப் பார்வை

   வீசுவர் ;

சண்டை சாடி

   மறந்து விட்டே

   கட்டி அணைத்தே

   தழுவுவர் !


      - பொறிஞர் இராதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக