பாரதி செந்தமிழ்த்
தேரினில் ஏறியே ஓட்டினான்
சிந்து மீட்டினான்
விந்தை காட்டினான் - தினம்
தமிழைப் பந்த மாக்கி
அமிழ்தைச் சந்த மாக்கி ஊட்டினான் ! ( 1 )
பாரினில் பெண்களைப்
பாழ்பட வைப்போரைத் தேடினான்
கண்டு வாடினான்
மிக்க சாடினான் - பெண்கள்
புரட்சிக் கொள்கை யேற்க
மிரட்சி தனைப் போக்க பாடினான் ! ( 2 )
சாதிகள் பார்ப்போரைச்
சமயச் சழக்கினை ஏசினான்
காணக் கூசினான்
கரி பூசினான் - அவர்
மடமை தனை நீக்கக்
கடமை தனைச் சேர்க்கப் பேசினான் ! ( 3 )
வீர சுதந்தர
தீர உணர்வினைத் தூண்டினான்
தடை தாண்டினான்
தீயைத் தீண்டினான் - மக்கள்
அடிமைத் தளை நீங்கக்
குடிமை நிலை ஓங்க வேண்டினான் ! ( 4 )
- இராதே
தேரினில் ஏறியே ஓட்டினான்
சிந்து மீட்டினான்
விந்தை காட்டினான் - தினம்
தமிழைப் பந்த மாக்கி
அமிழ்தைச் சந்த மாக்கி ஊட்டினான் ! ( 1 )
பாரினில் பெண்களைப்
பாழ்பட வைப்போரைத் தேடினான்
கண்டு வாடினான்
மிக்க சாடினான் - பெண்கள்
புரட்சிக் கொள்கை யேற்க
மிரட்சி தனைப் போக்க பாடினான் ! ( 2 )
சாதிகள் பார்ப்போரைச்
சமயச் சழக்கினை ஏசினான்
காணக் கூசினான்
கரி பூசினான் - அவர்
மடமை தனை நீக்கக்
கடமை தனைச் சேர்க்கப் பேசினான் ! ( 3 )
வீர சுதந்தர
தீர உணர்வினைத் தூண்டினான்
தடை தாண்டினான்
தீயைத் தீண்டினான் - மக்கள்
அடிமைத் தளை நீங்கக்
குடிமை நிலை ஓங்க வேண்டினான் ! ( 4 )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக