கரியுமிழும் வண்டிகளின் சேட்டை ;
அரித்துவரும் படலத்தை
அண்டிஊறும் புறஊதா
எரித்திடுமே இயற்கையின் கூட்டை !
- கடலலைகள் காலிலிடும் முத்தம் ;
இடைவிடாது காத்திருந்தான்
இன்னொருவன் கைப்பிடித்து
கடந்துசென்றாள் அவன்மனத்தில் யுத்தம் !
புகைப்பதினால் வந்திடுமே காசம் ;
புகையிழுத்துப் பெற்றஇன்பம்
புற்றுநோயைத் தருவதனால்
புகைப்பவரை இவ்வுலகம் ஏசும் !
அழைக்கின்ற இயற்கைதனை
அருந்திடவே சுவையூட்டும்
நிழற்படத்தைப் பிடித்திடுமே கருவி !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக