அன்னை வண்ணமொழி கூறும் - நெஞ்சில்
திண்ணம் மேவிடவே ஏறும் - தினம்
தான லர்ந்தமலர்
தேன டர்ந்தமொழி தேறும்
நாவி லூறும் !
பின்னை வன்மொழியால் கொள்ளை - நாமும்
இன்னும் உணர்வதே இல்லை - கடும்
ஆண வத்தினுயர்
மான மற்றவர்கள் எல்லை
நீண்ட தொல்லை !
தென்னந் தமிழ்மொழி நாற்றே - சோர்வோர்
தம்மை மகிழ்விக்கும் ஊற்றே - நனி
நாவ ளர்த்தமொழி
பாவ லர்செந்தமிழ்க் கீற்றே !
வீசுங் காற்றே !
கன்னல் என்னும்மொழி மானே - உள
எண்ண மாய்வாழும்என் தேனே - நெடு
நாளும் நின்றுகாக்கும்
காலங் கடந்தநற் றூணே !
வாழ்த்து வேனே !
--இராதே
திண்ணம் மேவிடவே ஏறும் - தினம்
தான லர்ந்தமலர்
தேன டர்ந்தமொழி தேறும்
நாவி லூறும் !
பின்னை வன்மொழியால் கொள்ளை - நாமும்
இன்னும் உணர்வதே இல்லை - கடும்
ஆண வத்தினுயர்
மான மற்றவர்கள் எல்லை
நீண்ட தொல்லை !
தென்னந் தமிழ்மொழி நாற்றே - சோர்வோர்
தம்மை மகிழ்விக்கும் ஊற்றே - நனி
நாவ ளர்த்தமொழி
பாவ லர்செந்தமிழ்க் கீற்றே !
வீசுங் காற்றே !
கன்னல் என்னும்மொழி மானே - உள
எண்ண மாய்வாழும்என் தேனே - நெடு
நாளும் நின்றுகாக்கும்
காலங் கடந்தநற் றூணே !
வாழ்த்து வேனே !
--இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக