பதுங்கு குழிதனில் பெண்டிர் மழலை
பயந்து நெளிந்தோட ! - தினம்
ஒதுங்கத் துரத்திடும் வலியோர் செயலில்
உருண்டு புரண்டோட ! - விழி
பிதுங்கு முகத்துடன் மகளிர் கண்ணீர்
பிழிந்து வழிந்தோட ! - மனம்
ததும்ப ஒழுகிடும் உணர்வு நினைந்தே
ஒன்று திரண்டிடுவோம் !
வனத்தில் விலங்குகள் பார்த்து நடுங்கி
மருண்டு மிரண்டோட ! - பல
தினங்கள் உணவுகள் உடையு மிழந்தே
திகைத்துத் தவித்தோட ! -நடைப்
பிணமாய் உலவிடும் நெஞ்சம் திறந்தே
பிளந்து கனன்றாட ! - உள
உணர்வறு மடையரின் கொட்டம் அடக்க
ஒன்று திரண்டிடுவோம் 1
நெஞ்சத் துயரினில் கண்ணீர் பெருகி
நிறைந்தே உருண்டோட ! - கொடும்
வஞ்சத் தனத்தினில் செந்நீர் சுரந்தே
வளைந்து வளைந்தோட ! - கடும்
பஞ்சம் பிழைத்திடும் துன்பம் விளைந்து
பதைத்துப் பதைத்தோட ! - அவர்
கெஞ்சல் செவிதனில் நொந்தே உரைக்க
ஒன்று திரண்டிடுவோம் !
கொத்து வெடிகளில் தமிழர் மாய்ந்தே
குலைந்து குலைந்தோட ! - இளம்
வித்து கருகிட தனிமக் குண்டு
விழுந்தே எரிந்தாட ! - நனி
சத்துத் தமிழரின் குருதி பொங்கித்
தகித்துக் கொதித்தாட ! - நமை
ஒத்து விரட்டிடும் அரக்கர் அழிக்க
ஒன்று திரண்டிடுவோம் !
கலங்கிப் புலம்பிடச் சிவந்து சினந்தே
சண்டை அதிர்ந்தாட ! - எம்
இலங்கைத் தமிழரை வெடிகள் துரத்த
எழுந்து வெகுண்டோட ! - தெரு
விலங்கிற் கிணையென நடத்தி யொழிக்க
விரைந்து வினையாட ! - கண்
கலங்கும் விழிநீர் துடைக்கத் துணிந்தே
ஒன்று திரண்டிடுவோம் !
வேரில் அழிக்க வெட்டும் நிலையை
விடுவாய் என்றோத ! - கடும்
போரில் தமிழரை மீட்க முனைந்தே
பொறுப்பாய் நின்றோத ! - பெரும்
பாரில் பலகுரல் ஓங்கி ஒலித்தே
பதமாய் சென்றோத ! - அவ்
ஊரில் விரைவினில் ஈழம் மலர
ஒன்று திரண்டிடுவோம் !
--இராதே
பயந்து நெளிந்தோட ! - தினம்
ஒதுங்கத் துரத்திடும் வலியோர் செயலில்
உருண்டு புரண்டோட ! - விழி
பிதுங்கு முகத்துடன் மகளிர் கண்ணீர்
பிழிந்து வழிந்தோட ! - மனம்
ததும்ப ஒழுகிடும் உணர்வு நினைந்தே
ஒன்று திரண்டிடுவோம் !
வனத்தில் விலங்குகள் பார்த்து நடுங்கி
மருண்டு மிரண்டோட ! - பல
தினங்கள் உணவுகள் உடையு மிழந்தே
திகைத்துத் தவித்தோட ! -நடைப்
பிணமாய் உலவிடும் நெஞ்சம் திறந்தே
பிளந்து கனன்றாட ! - உள
உணர்வறு மடையரின் கொட்டம் அடக்க
ஒன்று திரண்டிடுவோம் 1
நெஞ்சத் துயரினில் கண்ணீர் பெருகி
நிறைந்தே உருண்டோட ! - கொடும்
வஞ்சத் தனத்தினில் செந்நீர் சுரந்தே
வளைந்து வளைந்தோட ! - கடும்
பஞ்சம் பிழைத்திடும் துன்பம் விளைந்து
பதைத்துப் பதைத்தோட ! - அவர்
கெஞ்சல் செவிதனில் நொந்தே உரைக்க
ஒன்று திரண்டிடுவோம் !
கொத்து வெடிகளில் தமிழர் மாய்ந்தே
குலைந்து குலைந்தோட ! - இளம்
வித்து கருகிட தனிமக் குண்டு
விழுந்தே எரிந்தாட ! - நனி
சத்துத் தமிழரின் குருதி பொங்கித்
தகித்துக் கொதித்தாட ! - நமை
ஒத்து விரட்டிடும் அரக்கர் அழிக்க
ஒன்று திரண்டிடுவோம் !
கலங்கிப் புலம்பிடச் சிவந்து சினந்தே
சண்டை அதிர்ந்தாட ! - எம்
இலங்கைத் தமிழரை வெடிகள் துரத்த
எழுந்து வெகுண்டோட ! - தெரு
விலங்கிற் கிணையென நடத்தி யொழிக்க
விரைந்து வினையாட ! - கண்
கலங்கும் விழிநீர் துடைக்கத் துணிந்தே
ஒன்று திரண்டிடுவோம் !
வேரில் அழிக்க வெட்டும் நிலையை
விடுவாய் என்றோத ! - கடும்
போரில் தமிழரை மீட்க முனைந்தே
பொறுப்பாய் நின்றோத ! - பெரும்
பாரில் பலகுரல் ஓங்கி ஒலித்தே
பதமாய் சென்றோத ! - அவ்
ஊரில் விரைவினில் ஈழம் மலர
ஒன்று திரண்டிடுவோம் !
--இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக