என்னவள் பூமெத்தை மஞ்சம் - பனி
துஞ்சம் - மலர்
நெஞ்சம் - அதில்
தஞ்சம் - மனம்
எத்தனை முறைதானோ கெஞ்சும் - வன
இளமாமயில் இனிதாமென நடமாடிடும் மழைவேளையில்
இளமையில் வாடுறேன் கண்ணே ! - என்
புலம்பலைத் தீரடி பெண்ணே ! (1)
தண்எழில் பூமெனி பட்டு - தேன்
சிட்டு - மலர்
மொட்டு - மின்னல்
வெட்டு - முத்தம்
சத்தமாய்த் தருவேனோ தொட்டு - நிலை
தடுமாறிடும் தனித்தாமரை இனிகாலையும் வருமோவென
''சடுகுடு'' ஆடிடும் மனசு ! - இன்பத்
தவிப்பினில் துள்ளுதே வயசு ! (2)
கண்ணொளி சிந்துமே சன்னல் - ஒளி
மின்னல் - மொழிக்
கன்னல் - வெட்கப்
பின்னல் - உனைக்
கட்டியே பிடிப்பேனிவ் வண்ணல் - குளிர்
கடுங்காற்றினில் உறவாடிடும் நிலவேயெனத் தினமேங்கியே
கடுமையின் சோகமாய் அல்லி ! என்
கரத்தினைப் பற்றினால் துள்ளி ! (3)
கண்ணேநீ மாபெருந் தோட்டம் - மதுவின்
ஊட்டம் - புத்
தாட்டம் - விடு
வாட்டம் - அட
காமனின் கலைகளில் நாட்டம் - அருங்
கனிமாதரு சுவையூறிட அணில்தேடிட மறைந்தாடிடும்
கனிகளால் கூடிய சோலை ! - உளங்
களியுறக் கூவிடும் மாலை ! (4)
உன்னிதழ் வார்த்தைகள் நுட்பம் - வினைத்
திட்பம் - கட்டும்
கப்பம் - மிதவைத்
தெப்பம் - கண்
உண்ணவே எழுந்திடுமே வெப்பம் - வரும்
உளமாதவள் கடைவீதியில் இடையாடவே அசைந்தாடிட
உளதிரை ஓடிடும் அரங்கு ! - நம்
உரசலை நீக்கிட கிறங்கு ! (5)
பெண்ணவள் கழுத்தோவெண் சங்கு - இள
நுங்கு - எழில்
பங்கு - வளர்
தெங்கு - நனி
பேதையோ ஊடற்கி டங்கு - தினம்
பிறந்தேகிடும் உணர்வாகிய தனியாசைகள் உருவாகிட
பேரின்ப ஊசலின் வீச்சு ! - அகப்
பெருமைகள் கூறுமே மூச்சு ! (6)
அன்புள்ள உன்கண்கள் அம்பு - பெருந்
தெம்பு - போகும்
வம்பு - தேன்
செம்பு - நல்
ஆதரவு தருவேனே நம்பு - ஊறும்
அருளாகிய மனம்பேசிட அறியாதவள் உளம்வாடிட
அருமையாய்ச் செய்திடும் குறும்பு ! இல்
லறத்தினைத் தந்திடும் அரும்பு ! (7)
பொன்னென மின்னுமே கிண்ணம் - சுழிக்
கன்னம் - ஒளிர்
வண்ணம் - என்றும்
திண்ணம் - நனி
பொத்திந டப்பாளே அன்னம் - தனி
பொலிவாகிய அலைமாகடல் கரைமீதினில் மிதந்தாடிட
பொலிவாக வீசுமே தென்றல் ! நமை
பொருத்தவே கூடுமே மன்றல் ! (8)
--இராதே
துஞ்சம் - மலர்
நெஞ்சம் - அதில்
தஞ்சம் - மனம்
எத்தனை முறைதானோ கெஞ்சும் - வன
இளமாமயில் இனிதாமென நடமாடிடும் மழைவேளையில்
இளமையில் வாடுறேன் கண்ணே ! - என்
புலம்பலைத் தீரடி பெண்ணே ! (1)
தண்எழில் பூமெனி பட்டு - தேன்
சிட்டு - மலர்
மொட்டு - மின்னல்
வெட்டு - முத்தம்
சத்தமாய்த் தருவேனோ தொட்டு - நிலை
தடுமாறிடும் தனித்தாமரை இனிகாலையும் வருமோவென
''சடுகுடு'' ஆடிடும் மனசு ! - இன்பத்
தவிப்பினில் துள்ளுதே வயசு ! (2)
கண்ணொளி சிந்துமே சன்னல் - ஒளி
மின்னல் - மொழிக்
கன்னல் - வெட்கப்
பின்னல் - உனைக்
கட்டியே பிடிப்பேனிவ் வண்ணல் - குளிர்
கடுங்காற்றினில் உறவாடிடும் நிலவேயெனத் தினமேங்கியே
கடுமையின் சோகமாய் அல்லி ! என்
கரத்தினைப் பற்றினால் துள்ளி ! (3)
கண்ணேநீ மாபெருந் தோட்டம் - மதுவின்
ஊட்டம் - புத்
தாட்டம் - விடு
வாட்டம் - அட
காமனின் கலைகளில் நாட்டம் - அருங்
கனிமாதரு சுவையூறிட அணில்தேடிட மறைந்தாடிடும்
கனிகளால் கூடிய சோலை ! - உளங்
களியுறக் கூவிடும் மாலை ! (4)
உன்னிதழ் வார்த்தைகள் நுட்பம் - வினைத்
திட்பம் - கட்டும்
கப்பம் - மிதவைத்
தெப்பம் - கண்
உண்ணவே எழுந்திடுமே வெப்பம் - வரும்
உளமாதவள் கடைவீதியில் இடையாடவே அசைந்தாடிட
உளதிரை ஓடிடும் அரங்கு ! - நம்
உரசலை நீக்கிட கிறங்கு ! (5)
பெண்ணவள் கழுத்தோவெண் சங்கு - இள
நுங்கு - எழில்
பங்கு - வளர்
தெங்கு - நனி
பேதையோ ஊடற்கி டங்கு - தினம்
பிறந்தேகிடும் உணர்வாகிய தனியாசைகள் உருவாகிட
பேரின்ப ஊசலின் வீச்சு ! - அகப்
பெருமைகள் கூறுமே மூச்சு ! (6)
அன்புள்ள உன்கண்கள் அம்பு - பெருந்
தெம்பு - போகும்
வம்பு - தேன்
செம்பு - நல்
ஆதரவு தருவேனே நம்பு - ஊறும்
அருளாகிய மனம்பேசிட அறியாதவள் உளம்வாடிட
அருமையாய்ச் செய்திடும் குறும்பு ! இல்
லறத்தினைத் தந்திடும் அரும்பு ! (7)
பொன்னென மின்னுமே கிண்ணம் - சுழிக்
கன்னம் - ஒளிர்
வண்ணம் - என்றும்
திண்ணம் - நனி
பொத்திந டப்பாளே அன்னம் - தனி
பொலிவாகிய அலைமாகடல் கரைமீதினில் மிதந்தாடிட
பொலிவாக வீசுமே தென்றல் ! நமை
பொருத்தவே கூடுமே மன்றல் ! (8)
--இராதே
சிறப்பு!
பதிலளிநீக்கு