- தராசில்
கவிதை சுவடி
கனக்கிறது மனசு
- ஆழ்ந்த உறக்கம்
துயில் கலைப்பு
கொறட்டை
- தொங்கும் தோரணங்கள்
சன்னல் கம்பிகளில்
மழைநீர்
- புத்தகச் சுமை
ஐந்தில் வளைந்தன
பிஞ்சுகள்
- வினவும் குழந்தைகள்
விடை தேடும் பெற்றோர்
நெருடல் விளம்பரம்
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக