- சிறுமிக்கு மாப்பிள்ளை தவளை
சிறுமதியார் செயலாலே கவலை
கூறுகெட்ட கொள்கைக்குக்
கும்பிடும் கூட்டமெண்ணி
பொறுக்காமல் கண்ணீரின் திவலை !
- நினைவுகளை நெஞ்சினிலே அள்ளு
நினைவுறுத்தி நெருடுமந்த முள்ளு
கனவுகளில் களித்திருந்து
காலமெல்லாம் காத்திருந்து
புனைவுகளாய் ஆனகதை விள்ளு !
- உயிரெடுக்கும் ''எய்ட்சு'' என்ற கொள்ளி
உயிரணுவை அழிக்கிறதே துள்ளி
இயம்புகின்ற ஒழுக்கத்தை
இழப்பதனால் வருகின்ற
நோயெதிர்ப்போம் தலைமுறைக்குச் சொல்லி !
- கள்விற்க அரசுகாட்டும் நாட்டம்
கல்வியினைக் கைகழுவும் கூட்டம்
கள்பணத்தில் நிரம்பியதைக்
கண்டபடி செலவிடவும்
கள்ளூறும் கடைதிறந்தே ஆட்டம் !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக