காரிருள் மேகக் கூந்தல்
கற்றையை முடித்த வானம்
கூரிய முல்லை கூட்டம்
குவிப்பதாய் மின்னல் வெட்டு
சீரிய கூந்தல் சொட்டே
சிதறிடும் மழையாய்த் தூறல்
மாரியாய் விரைவு கூட்டி
மண்ணிலே பொழியும் பாரீர் !
ஓடிடும் மழைநீ ரெல்லாம்
ஓடையி னூடே பாய்ந்தே
ஆடிடும் கடலில் சேர்ந்தே
அடங்கிடும் வீணாய் எல்லாம்
தேடியே குடிநீர் வேண்டித்
தெருவினில் வரிசை யாகக்
கூடிடும் மக்கள் எல்லாம்
குறைதனை உணர்ந்தார் அல்லர் !
தேங்கிய குளங்கள் எங்கே ?
தெளிந்தநீ ரோடை யெங்கே ?
வாங்கிய நீரை வாரி
வழங்கிடும் ஏரி எங்கே ?
வீங்கிய கிணறும் எங்கே ?
விரைந்திடும் நதிகள் எங்கே ?
தூங்கியே வழிந்தோம் நாமே
தொலைந்தன எல்லாம் இங்கே ?
குளங்களை மூடும் போக்கில்
குப்பையைக் கொட்டித் தீர்த்தோம்
வளந்தரும் ஏரிக் குள்ளே
வசதியாய் உழவு செய்தோம்
களங்களாய்க் கிணற்றை மாற்றி
கண்மாயில் மனைகள் போட்டோம்
விளங்கிய நீர்நிலைகள்
விரைவினில் ஒழியக் கண்டோம் !
விண்ணிடை விழுதாய் வீழும்
விசும்பளி துளியைச் சேர்த்து
மண்ணுளே செலுத்தி நீரை
மறுபடி சுரக்கச் செய்து
கண்ணுள ஊற்றாய்ப் பொங்க
கவின்மிகு நதிகள் காண்போம்
எண்ணமாய் நெஞ்சில் ஏந்தின்
இன்பமாய் நடக்கும் காணீர் !
சிந்திடும் நீர்த டுப்போம்
சிக்கனச் செலவு செய்வோம்
வந்திடும் நீரைத் தேக்கி
வளத்தினைப் பகிர்ந்து கொள்வோம்
சந்ததி குடிக்கத் தண்ணீர்
தலைமுறை காண வேண்டிப்
புந்தியில் வைத்தே நீரை
பொறுப்புடன் போற்றிக் காப்போம் !
இராதே
கற்றையை முடித்த வானம்
கூரிய முல்லை கூட்டம்
குவிப்பதாய் மின்னல் வெட்டு
சீரிய கூந்தல் சொட்டே
சிதறிடும் மழையாய்த் தூறல்
மாரியாய் விரைவு கூட்டி
மண்ணிலே பொழியும் பாரீர் !
ஓடிடும் மழைநீ ரெல்லாம்
ஓடையி னூடே பாய்ந்தே
ஆடிடும் கடலில் சேர்ந்தே
அடங்கிடும் வீணாய் எல்லாம்
தேடியே குடிநீர் வேண்டித்
தெருவினில் வரிசை யாகக்
கூடிடும் மக்கள் எல்லாம்
குறைதனை உணர்ந்தார் அல்லர் !
தேங்கிய குளங்கள் எங்கே ?
தெளிந்தநீ ரோடை யெங்கே ?
வாங்கிய நீரை வாரி
வழங்கிடும் ஏரி எங்கே ?
வீங்கிய கிணறும் எங்கே ?
விரைந்திடும் நதிகள் எங்கே ?
தூங்கியே வழிந்தோம் நாமே
தொலைந்தன எல்லாம் இங்கே ?
குளங்களை மூடும் போக்கில்
குப்பையைக் கொட்டித் தீர்த்தோம்
வளந்தரும் ஏரிக் குள்ளே
வசதியாய் உழவு செய்தோம்
களங்களாய்க் கிணற்றை மாற்றி
கண்மாயில் மனைகள் போட்டோம்
விளங்கிய நீர்நிலைகள்
விரைவினில் ஒழியக் கண்டோம் !
விண்ணிடை விழுதாய் வீழும்
விசும்பளி துளியைச் சேர்த்து
மண்ணுளே செலுத்தி நீரை
மறுபடி சுரக்கச் செய்து
கண்ணுள ஊற்றாய்ப் பொங்க
கவின்மிகு நதிகள் காண்போம்
எண்ணமாய் நெஞ்சில் ஏந்தின்
இன்பமாய் நடக்கும் காணீர் !
சிந்திடும் நீர்த டுப்போம்
சிக்கனச் செலவு செய்வோம்
வந்திடும் நீரைத் தேக்கி
வளத்தினைப் பகிர்ந்து கொள்வோம்
சந்ததி குடிக்கத் தண்ணீர்
தலைமுறை காண வேண்டிப்
புந்தியில் வைத்தே நீரை
பொறுப்புடன் போற்றிக் காப்போம் !
இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக