சுடர்விட் டெரியும்வெய்யோன்
கதிர்விட் டெரியும்வெப்பம்
தொடருந் தகிதகிப்பில் வையமே - இனி
அடர்ந்த வனங்களேதோ ஐயமே - மிகு
தூய வானிலே தூவும் மாமழை
காய வேநிலம் காணு மேயென
சுழலும் பருவங்கள் கூறுமே ! - அதில்
உழலும் உலகமது மாறுமே ! ( 1 )
உடறல் வெயிற்றெளிப்பில்
இடறும் பனிமலைகள்
உருகிக் கடலின்மட்டம் கூடுமே - அலை
பெருகி உயிர்ப்பறிக்க ஓடுமே - மலை
ஊறும் ஆறுகள் பாயு மாயினி
சோறு பானையும் வேகு மாயென
உலைச்சல் மனங்கிடந்து நோகுமே ! - பயிர்
விளைச்சல் வறண்டுதான் சாகுமே ! ( 2 )
மிடறைப் பிடிக்கும்படி
தொடரும் இயற்கைகொலை
நடப்பின் உயிரினங்கள் மாயுமே - புவி
கிடப்பில் விழுந்துசுழல் ஓயுமே - நிலஞ்
சூழும் கேடுகள் நாளும் ஓங்கிட
வாழும் பூமியும் மீளு மாயேன
அலறும் நிலைமிகுந்து போகுமோ ? - நலம்
புலரும் புதியநிலை ஏகுமோ ? ( 3 )
படருங் கரியின்புகை
மடியும் வளியின்திரை
படலம் அறுந்துவிழும் ஓட்டையே - காட்டும்
மடலாம் இயற்கைபடும் பாட்டையே - வான்
ஓசோன் போர்வையை கீறிப் பாய்ந்திடும்
மாசு காற்றினை மாள வேசெயும்
பயனாய் மரங்களையே நாட்டுவோம் ! - அதன்
தயவில் மறுமலர்ச்சி ஊட்டுவோம் ! ( 4 )
-இராதே
கதிர்விட் டெரியும்வெப்பம்
தொடருந் தகிதகிப்பில் வையமே - இனி
அடர்ந்த வனங்களேதோ ஐயமே - மிகு
தூய வானிலே தூவும் மாமழை
காய வேநிலம் காணு மேயென
சுழலும் பருவங்கள் கூறுமே ! - அதில்
உழலும் உலகமது மாறுமே ! ( 1 )
உடறல் வெயிற்றெளிப்பில்
இடறும் பனிமலைகள்
உருகிக் கடலின்மட்டம் கூடுமே - அலை
பெருகி உயிர்ப்பறிக்க ஓடுமே - மலை
ஊறும் ஆறுகள் பாயு மாயினி
சோறு பானையும் வேகு மாயென
உலைச்சல் மனங்கிடந்து நோகுமே ! - பயிர்
விளைச்சல் வறண்டுதான் சாகுமே ! ( 2 )
மிடறைப் பிடிக்கும்படி
தொடரும் இயற்கைகொலை
நடப்பின் உயிரினங்கள் மாயுமே - புவி
கிடப்பில் விழுந்துசுழல் ஓயுமே - நிலஞ்
சூழும் கேடுகள் நாளும் ஓங்கிட
வாழும் பூமியும் மீளு மாயேன
அலறும் நிலைமிகுந்து போகுமோ ? - நலம்
புலரும் புதியநிலை ஏகுமோ ? ( 3 )
படருங் கரியின்புகை
மடியும் வளியின்திரை
படலம் அறுந்துவிழும் ஓட்டையே - காட்டும்
மடலாம் இயற்கைபடும் பாட்டையே - வான்
ஓசோன் போர்வையை கீறிப் பாய்ந்திடும்
மாசு காற்றினை மாள வேசெயும்
பயனாய் மரங்களையே நாட்டுவோம் ! - அதன்
தயவில் மறுமலர்ச்சி ஊட்டுவோம் ! ( 4 )
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக