நீலத் திரையின் பெருங்கடல் - சந்தத்
தாளத் திரையைத் தருங்கடல்
நிலவின் ஒளியின் துளிப்பட்டே - வாளை
உலவும் களிப்பில் வெளிப்பட்டே
கோலப் படகும் அசைந்திட - வலை
யாளப் படகும் இசைந்திட
மீனம் நிரம்பி வழியவும் - மன
வானம் நிரம்ப பொழியவும்
ஏலச் சத்தமும் விரையவே - கரை
நீளம் நித்தமும் இரையவே
துள்ளிடும் மீன்களைப் பெற்றதும் - பணம்
அள்ளிடும் மீன்களை விற்றதும்
சால உழைப்பின் களைப்பிலும் - இரத்த
நாள இழைப்பின் திளைப்பிலும்
உள்ளம் நெகிழ்ச்சிக் கொள்ளவே - மக்கள்
வெள்ளம் மகிழ்வில் விள்ளுமே !
-இராதே
தாளத் திரையைத் தருங்கடல்
நிலவின் ஒளியின் துளிப்பட்டே - வாளை
உலவும் களிப்பில் வெளிப்பட்டே
கோலப் படகும் அசைந்திட - வலை
யாளப் படகும் இசைந்திட
மீனம் நிரம்பி வழியவும் - மன
வானம் நிரம்ப பொழியவும்
ஏலச் சத்தமும் விரையவே - கரை
நீளம் நித்தமும் இரையவே
துள்ளிடும் மீன்களைப் பெற்றதும் - பணம்
அள்ளிடும் மீன்களை விற்றதும்
சால உழைப்பின் களைப்பிலும் - இரத்த
நாள இழைப்பின் திளைப்பிலும்
உள்ளம் நெகிழ்ச்சிக் கொள்ளவே - மக்கள்
வெள்ளம் மகிழ்வில் விள்ளுமே !
-இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக