இராதே

இராதே
eradevadassou

சனி, 19 மார்ச், 2022

வெள்ளரிக்காய்

 வெள்ளரிக்காய் (97) 



 வெள்ளரிக் கொடியின் காய்தான் 

 வெப்பத்தைத் தணிக்குங் காய்தான் ; 

துள்ளிடும் நாவின் வறட்சித் 

 துரத்தியே அடக்குங் காய்தான் ; 

உள்ளெழுஞ் சிவப்ப ணுக்கள் 

 ஊறிடுங் குருதிக் கூட்டும் ; 

உள்ளூறக் குடலில் படியும் 

 ஊதுபுகை நச்சை அகற்றும் ! 



 குடலுள்ளே படருங் கொழுப்பைக் 

 குன்றிடச் செய்தே நீக்கும் ; 

குடலதன் தூய்மை பேணும் 

 குடல்வளர்ப் புண்கள் ஆற்றும் ; 

உடலதன் எடையைக் குறைக்கும் 

 உதிர்ந்திடும் முடியைத் தடுக்கும் ; 

தொடர்ந்திடும் வாயின் நாற்றத் 

தொல்லையைத் தீர்த்தே கட்டும் ! 



 வெள்ளரி மலத்தை இளக்கும் 

 வெள்ளரி ஈரல் காக்கும் ; 

வெள்ளரிச் சிறுநீர்ப் பெருக்கும் ; 

 வெள்ளரி உடற்தோல் தேற்றும் ; 

வெள்ளரி உண்ண மூளை 

 வேகமாக செயலில் இறங்கும் ; 

வெள்ளரிக் காயைத் தின்போம் 

 வேண்டிய நன்மை கொள்வோம் ! 


                                                   - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக