இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 13 ஜூலை, 2025

காந்தளூர் களிநடனம்

 காந்தளூர் களிநடனம் 


அகடுகளின் முகடுகளின் அணிமலையின் கூட்டம்


  அலைதிரளும் வெண்முகிலின் வழியுமெழிற் மூட்டம்

நகையுதிர பரிதிஒளி

நடனமிடும் ஆட்டம்

   நளினமுறு இளமஞ்சள் நிறமிளிரும் ஊட்டம்

வகைவகையாய் வரைமீதில் வண்ணமலர் நீட்டம்

  வரவேற்கும் வண்டிசையோ வண்ணத்தமிழ் நாட்டம்

தகதகிக்கும் கிளிபசுமை எதிரொளிக்கும் கோட்டம்

   தனியழகு காந்தளூர் கவலைதனை

ஓட்டும் !


                    - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக