உருப்படி
தூரிகை தந்த ஓவியம்
எடுப்பு
திட்டுத் திட்டாய் - வெள்ளை
திட்டுத் திட்டாய்
விட்டு விட்டே - இடை
விட்டு விட்டே
மொட்டு மொட்டாய் - முல்லை
மொட்டு மொட்டாய்த்
தொட்டுத் தொட்டே - கோலத்
தூரிகை தந்த ஓவியமே - எழில்
பாவியமே - கலை
பூரதமே ( திட்டு)
முடிப்பு
கோடுகளே - வளை
கோடுகளே
போடுங்களேன் - படம்
போடுங்களேன்
தேடுங்களேன் - புகழ்
தேடுங்களேன்
நாடுங்களேன் - நிலை
நாடுங்களேன் ( திட்டு)
வேய்ந்திடவே - காதல்
வேய்ந்திடவே
சாய்ந்திடவே - தோள்
சாய்ந்திடவே
தோய்ந்திடவே - முத்தம்
தோய்ந்திடவே
மேய்ந்திடுமே - இதழ்
மெய்யுடலில் ( திட்டு)
இமைகளிலே - நிறை
இனிமைகளைச்
சுமைக்கையிலே - சுகம்
சுவைக்கையிலே
அமைதியிலே - ஆழம்
அளக்கையிலே
இமையுறுத்தும் - இன்பம்
இதயத்திலே ( திட்டு)
வந்தனளே - பெண்
வந்தனளே
தந்தனளே - தன்னைத்
தந்தனளே
சிந்தினளே - தேன்
சிந்தினளே
சிந்தையிலே - அமர்
விந்தையிலே ( திட்டு)
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக