உருப்படி
தொங்கும் இலை !
எடுப்பு
தொங்கும் இலையே !
தொங்கும் இலையே !
ஒற்றைத் தோரணப்
புதுமையா ?
பொங்கும் காதல்
சின்னம் என்றே
பொழியும் உணர்விழை
வளமையா ? ( தொங்கும் )
தொடுப்பு
எங்குமே எதிலுமே
கலந்து விடாமல்
ஏனோ தனிமையில்
தவிக்கிறாய் ?
தங்கிடும் அழகினைத்
தனியே காட்டிடத்
தவழுங் காற்றிலே
அலைகிறாய் ! ( தொங்கும் )
முடிப்பு
தங்கம்உன் தளிர்மேனி
தனித்தாடும் கலையேநீ
தொங்கட்டான் நகையோநீ
சுழன்றாடும் இலையேநீ
மங்காத சிவப்போநீ
மழைத்துளியின் திடலோநீ
சிங்கார எழில்ராணி
சிரித்தாடும் மகிழ்வேநீ (தொங்கும்)
சருகாக விழும்நாளில்
சரித்திரம் இசைப்பாய்நீ
இறுகிய உளத்தினையும்
இளக்கிடும் உன்சோகம்
கருவாகி உருவாகி
கதைசொன்ன இலையேநீ
கருகாத நினைவாகி
காலங்கள் வெல்வாய்நீ ( தொங்கும்)
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக