கொட்டும் மழை !
எடுப்பு
குடையே ! குடையே !
நீ எங்கே ?
கொட்டும் மழையில்
நான் இங்கே ! ( குடையே)
தொடுப்பு
விடையின்றி கேள்விகள்
துளைக்கிறதே !
வீழ்ந்திடும் முகில்நீர்
துவைக்கிறதே ! (குடையே)
முடிப்பு
இடைவிடாது மழை
தடைபடாது வென
இடிபட பொடிபட
பொழிகிறதே !
அடைபடாது மனம்
அளவிலாத படி
அவசர சரசத்தில்
மகிழ்கிறதே !
நடையறாத இசை
நடனமாது மிசை
நளினங்கள் சலனங்கள்
தெறிக்கிறதே !
உடையிலாத இடை
உரசியாடுஞ் சடை
உருகிட உருகிட
அழைக்கிறதே ! ( குடையே )
அசைவிலாடும் விழி
அதனைமேவும் மொழி
அதகள ரதகளப்
படுகிறதே !
பசையைப்போல இதழ்
பருகுமுத்த முதல்
பசப்பிட பசப்பிட
இழுக்கிறதே !
சுவைபடாத கனி
சுவையுமாகும் இனி
சுகப்பட அகப்பட
விழைகிறதே !
விசையிலாடும் உளம்
விரகம்பாடும் களம்
விறகெரி மெழுகென
வழிகிறதே ( குடையே)
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக