இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உப்பு

 உப்பு (93) 



 உப்பாம் உப்பாம் உப்புதான் 

 உணவு சுவைக்க உப்புதான் ; 

உப்பே இல்லாப் பண்டமே 

 ஒதுக்கி எறிவார் குப்பையில் ; 

உப்பே உணவுக் கெடாமலே 

 ஒழுங்காய்க் காக்கும் உயர்பொருளாம் ; 

உப்பை அளவாய்ச் சேர்த்துண்டால் 

 உடலின் நலமும் மேம்படுமே ! 



 உப்பால் உமிழ்நீர்ச் சுரந்திடுமே 

 உப்பால் தொற்றுகள் அழிந்திடுமே ; 

உப்பால் ஈறுகள் வலுப்பெறுமே 

 உப்பால் பற்கள் சீர்ப்பெறுமே ; 

உப்பால் தொண்டைப் புண்ணாறும் 

 உப்பால் நரம்பின் செயல்கூடும் ; 

உப்பால் காலுள் வெடிப்புகள் 

 ஒழிந்தே தொல்லைத் தீர்ந்திடுமே ! 

 


உப்பு மிகினுங் கேடுதான் 

 உப்புக் குறைவுங் கேடுதான் ; 

உப்பின் தேவை அறிந்தறிந்தே 

 உப்பை உணவில் சமைக்கலாம் ; 

உப்புக் கரைசல் நஞ்சழிக்கும் 

 உப்புத் தடுக்கும் சத்திழப்பை ; 

உப்பு வெள்ளைத் தங்கமாம் 

 உரிய முறையில் பயன்கொள்வோம் ! 


                                                               - இராதே

அரத்திப் பழம்

 அரத்திப் பழம் (92) 

 (ஆப்பிள்) 



 அரத்திப் பழமே ஆப்பிளாம் 

 அதற்குக் 'குமளி' பெயருண்டாம் ; 

அரத்தி நாளும் உண்பதால் 

 அணுக வேண்டாம் மருத்துவம் ; 

அரத்தி மூளை காக்குமே 

 அரத்தி இதயம் பேணுமே ; 

அரத்தி அழகை, இளமையை 

 அதிக அளவில் கூட்டுமே ! 



 நரம்பும் எலும்பும் வலுப்படும் 

 நன்கு பற்கள் பளிச்சிடும் ; 

விரட்டும் பக்க வாதத்தை 

 விலக்கும் குருதிச் சோகையை ; 

மிரட்டும் புற்று நோய்களை 

 மிரண்டே ஓடச் செய்யுமே ; 

அரட்டும் மலத்தின் சிக்கலை 

 அறுக்கும் பழமே அரத்தியாம் ! 



 தொண்டை , வாயின் நுண்மிகள் 

 தொடரா வண்ணம் அழிக்குமே ; 

அண்டும் குடலின் தொற்றுகள் 

 அகற்றி வெளியே தள்ளுமே ; 

நிண்டும் பசியைப் போக்குமே 

 நினைவின் ஆற்றல் தூண்டுமே ; 

உண்டால் நன்மை பயன்தரும் 

 உயர்ந்த அரத்திப் பழமிதாம் ! 

                                                - இராதே

வாழைப்பூ

 வாழைப்பூ (91)



 கண்ணும் புரைநோய்க் காணாதே 

 கருவிழிப் படலம் நையாதே ; 

எண்ணும் மூளைத் துடிப்பாகும் 

 இதயம் இயக்கம் நலமாகும் ; 

பெண்ணின் வாந்தித் தலைசுற்றல் 

 பெருக விடாமல் மறித்துவிடும் ; 

மண்ணில் விளைந்த மருந்தாமே 

 வாழை ஈந்த வாழைப்பூ ! 



 குருதி அழுத்தம் சமப்படுமே 

 குருதிக் கொழுப்பைக் கரைத்திடுமே ; 

குருதி நாளம் செழையுறும் 

 குருதித் தூய்மை சீர்மையுறும் ; 

குருதி இனிப்புக் குறைந்திடுமே 

 குருதிச் சோகைத் தீர்ந்திடுமே ; 

குருதி வளத்தின் நண்பனாய்க் 

 குன்றா துழைக்கும் வாழைப்பூ ! 



 சூலை வயிற்றுப் புண்களைத் 

 தூர விரட்டும் வாழைப்பூ; 

மூலக் கடுப்பை நிறுத்திடுமே 

 மூலப் புண்கள் ஆற்றிடுமே ; 

கால்கை எரிச்சல் அடக்கிடுமே 

 கழிச்சல் முற்றுப் பெற்றிடுமே ; 

சாலச் சிறந்த உணவதான் 

 சான்றே நமக்கு வாழைப்பூ ! 


                                                   - இராதே

சனி, 19 பிப்ரவரி, 2022

பச்சை மிளகாய்

 பச்சை மிளகாய் (90)  




பச்சைப் பச்சை மிளகாய் 

 பயன்கள் மிக்க மிளகாய் ; 

உச்சக் காரங் கொண்ட 

 உணவுப் பொருளே மிளகாய் ; 

அச்ச மூட்டும் புற்றை 

 அழிக்க வல்ல மிளகாய் ; 

எச்ச மாக்கிக் கொழுப்பை 

 எளிதில் கரைக்கும் மிளகாய் ! 

 



குடலைத் தூய்மை செய்யும் 

 குருதி ஓட்டம் பாயும் ; 

உடலின் வெப்பங் கூட்டும் 

 உணவைச் செரிக்க வைக்கும் ; 

உடலில் வியர்வைப் பெருக்கும் 

 உடல்தோல் நோய்கள் மாய்க்கும் ; 

அடங்காத் தொண்டைக் காரல் 

 அடக்கும் பச்சை மிளகாய் ! 

 



துடிக்கும் இதயங் காக்கும் 

 தூண்டுந் தொற்றை ஒழிக்கும் ; 

இடிக்குந் தலைநோய்ப் போக்கும் 

 இனிப்பு நீரைக் குறைக்கும் ; 

முடிகள் உதிர்வைத் தடுக்கும் 

 மூட்டின் வலிகள் நீக்கும் ; 

முடிந்த வரையில் நன்மை 

 முழுக்க தருமாம் மிளகாய் ! 



                                           - இராதே

நறுவல்லிப் பழம்

 நறுவல்லி (89) (மூக்குச்சளி பழம்) 



 நறுவல்லி நறுவல்லிப் பழமே 

 நலம்பல நிறைவாகத் தருமே ; 

சிறுநீரை எளிதாகப் பிரிக்கும் 

 சிறுநீரின் குழல்நோயைத் தடுக்கும் ; 

உறுத்துகிற குடற்புழுக்கள் அழிக்கும் 

 உடலெழும் எடைகூட பெருக்கும் ; 

மறுதலிக்கும் மலத்தினை இளக்கும் 

மருந்தேதான் நறுவல்லிப் பழமாம் ! 



 உடலுக்கும் குளிர்ச்சியை அளிக்கும் 

 உடலதன் சோர்வினை முறிக்கும் ; 

உடல்தோல் சுருக்கங்கள் நீக்கும் 

 உடல்படு தொழுநோயைப் போக்கும் ; 

உடல்தோலில் மினுமினுப்புத் தோன்றும் 

உடலெழில் இளமையைக் கூட்டும் ; 

குடலுறும் நோய்களைத் தீர்க்கும் 

குணங்கொண்ட நறுவல்லிப் பழமே ! 



 தொண்டைநோய் ,குரல்கம்மல் அடக்கும் 

தொண்டையுறும் வறட்சியும் விலக்கும் ; 

மண்ணீரல் கல்லீரல் வீக்கம் 

 மண்டியிட் டோடோடச் செய்யும் ; 

கண்வலி,வெட்டைநோய்த் துரத்தும் 

 கல்லீரல் நச்சுக்களை விரட்டும் ; 

நன்மைதனைக் கொடையாகப் பொழியும் 

நறுவல்லி மூக்குச்சளிப் பழமே ! 


                                                     - இராதே

பொரி

 பொரி (88) 



நெல்லில் பொரிந்தப் பொரியாம் 

 நேர்த்தி உணவு பொரியாம் ; 

அல்லல் தொற்று நோய்கள் 

அறுக்கும் உணவு பொரியாம் ; 

மெல்ல வீக்கந் தணிக்கும் 

 மேனி எடையைக் குறைக்கும் ; 

தொல்லை மலத்தின் சிக்கல் 

 தொலைத்துக் கட்டும் பொரியாம் ! 


 வயிற்றுப் போக்கு , வாந்தி, 

 வயிற்றில் காற்றின் உழற்சி; 

வயிற்றுப் புண்கள் ,காய்ச்சல், 

 மார டைப்பு , வாதம் 

உயிரை எடுக்கும் பிணிகள் 

 உடலில் வராமல் தடுக்கும் ; 

உயிர்ப்பாய் மூச்சு நோய்கள் 

 ஒழிக்கும் மருந்து பொரியாம் ! 



 முகத்தின் சுருக்கம் , கோடு 

 முகத்தில் கருமை புள்ளி 

முகத்தை விட்டே அகல 

 முழுதாய் உழைக்கும் பொரியாம் ; 

அகத்துள் குருதி அழுத்தம் 

 அடக்கும் உணவு பொரியாம் ; 

தகர்க்குந் தோலின் நோய்கள் 

 சத்து நிறைந்த பொரியே ! 


                                        - இராதே

கசகசா

 கசகசா (87) 



மருத்துவ அரசனாம் கசகசா 

 மலச்சிக்கல் தீர்த்திடுங் கசகசா ; 

கருப்பையின் குழாய்களைச் சரிசெய்யும் 

கருப்பையில் அடர்சளி வெளியாக்கும் ; 

கருவுறுதல் நிகழ்ந்திட துணைநிற்கும் 

கழிச்சலை முற்றிலும் நிறுத்திடும் ; 

கருங்கூந்தல் வளர்ச்சிக்குத் துணைசெய்யும் 

கண்பார்வை மேம்படுத்துங் கசகசா ! 



 மிகைக்குருதிப் போக்கினைத் தடுத்திடும் 

மிகுந்திடுங் கொழுப்பினைக் கரைத்திடும் ; 

தகர்ந்திடும் குடற்புழு, தோலழற்சி 

 தணிந்திடும் இனிப்புநீர் ,வலிகள் ; 

முகப்பருவை மெல்லவே நீக்கிடும் 

 மூளையைச் சிறப்பாக்குங் கசகசா ; 

முகத்தினைப் பொலிவுற மாற்றிடும் 

 மூச்சழற்சிச் சீர்செய்யுங் கசகசா ! 



 குருதியின் அழுத்தத்தைச் சமன்படுத்தும் 

குருதியின் ஓட்டத்தைச் சீர்ப்படுத்தும் ; 

அருமையாய்த் தூக்கத்தை வரவழைக்கும் 

அகலுமே ஊளைச்சதை ,தலைக்கனம் ; 

நெருடிடும் வாய்ப்புண்கள் ,தோல்நோய்கள் 

நெருங்கிடச் செய்யாதே கசகசா ; 

அருவியாய் நன்மைகள் படைத்திடும் 

அருங்கொடை உணவுதான் கசகசா ! 


                                                      - இராதே

மஞ்சள் முள்ளங்கி

 மஞ்சள் முள்ளங்கி(86) (கேரட்) 



 தோலின் நிறத்தை மெருகேற்றும் 

 தோலின் கருமை நீக்கிவிடும் ; 

தோலின் அரிப்பைத் தடுத்துவிடும் 

 தோலில் உலர்தல் போக்கிவிடும் ; 

தோலில் சுருக்கம் சரிசெய்யும் 

 தோலைப் பொலிவாய் மிளிரவிடும் ; 

தோலைக் காவல் செய்கின்ற 

 தோழன் மஞ்சள் முள்ளங்கி ! 



 வயிற்றுப் போக்கு நின்றுவிடும் 

 வயிற்றுப் பொருமல் அகன்றுவிடும் ; 

வயிற்றுப் புண்ணை ஆற்றிவிடும் 

 வாய்ப்புண் மறைந்தே தேறிவிடும் ; 

வயிற்றுள் புழுக்கள் கொன்றுவிடும் 

 வாயில் ஈறும் உறுதிப்படும் ; 

வயிற்றைத் தூய்மை படுத்துகிற 

 மருந்தே மஞ்சள் முள்ளங்கி ! 



 தொண்டை, குடலுள் புற்றழிக்கும் 

 துவலும் ஈரல் மேம்படுத்தும் ; 

அண்டுங் கொழுப்பைக் கரைத்துவிடும் 

அணுக்கள் பெருகும் குருதியிலே 

மண்டும் வலிகள் சோர்வினையும் 

 வாகாய்த் தீர்த்துத் தெம்பூட்டும் ; 

கண்கள் ,பற்கள் ,எலும்புகளைக் 

 காக்கும் மஞ்சள் முள்ளங்கி ! 


                                                    - இராதே

பூக்கோசு

 பூக்கோசு (85)  



நச்சுக் கழிவுகள் அகற்றிடுமாம் 

 நல்ல உடற்கட்டுத் தேற்றிடுமாம் ; 

குச்சிப் போன்ற உடல்வாகுக் 

 குண்டாய் மாறிட உழைத்திடுமாம் ; 

உச்சி முடியதன் வளர்ச்சிக்கும் 

 உருட்டுந் தலைவலி நோய்க்கும் 

அச்ச மூட்டிடும் புற்றிற்கும் 

 அரிய மருத்துவம் பூக்கோசு ! 



 நாக்கை வாட்டிடும் வறட்சியையும் 

 நசிக்கும் உலர்ந்தத்தோல் பிணியினையும் 

மூக்குச் சளியின் தொல்லைகளும் 

 முன்நின் றொடுக்கும் பூக்கோசு ; 

தாக்கும் மூலநோயை அடக்கிடுமாம் 

 தங்கும் கொழுப்பினைக் கரைத்திடுமாம் ; 

நீக்கும் வீக்கத்தைப் பூக்கோசு 

 நினைவின் ஆற்றலைப் பெருக்கிடுமாம் ! 

 


கழலை எதிரியாம் பூக்கோசு 

 காக்கும் இதயத்தைப் பூக்கோசு ; 

மழலைக் குழந்தையர் வலுவாக 

 வளர உதவிடும் பூக்கோசு ; 

அழற்சித் தூண்டிடுந் தொற்றுக்களை 

 அறவே வெளித்தள்ளும் பூக்கோசு ; 

துழவித் துருவியே உடல்காக்கும் 

 தூய நண்பனாம் பூக்கோசு ! 



                                                   - இராதே 


 கழலை : சதைக்கட்டி

கோசுக் கிழங்கு

 கோசுக் கிழங்கு ( டர்னிப் ) (84) 



 கோசுக் கிழங்குப் பசிக்கும் உணர்வடக்கும் 

கோசுக் கிழங்கு வயிற்று வீக்கமொடுக்கும் ; 

கோசுக் கிழங்குப் பக்க வாதமொழிக்கும் 

 கோசுக் கிழங்கு மூட்டு வலிமுடக்கும் ; 

கோசுக் கிழங்காம் இரப்பை நோய்த்தடுக்கும் 

கோசுக் கிழங்காம் எலும்பை வலுவேற்றும் ; 

கோசுக் கிழங்காம் இருமல், சளிமுறிக்கும் 

கோசுக் கிழங்காம் உடலின் எடையிறக்கும் ! 

 


குருதிக் கொழுப்பை அகற்றுங் கிழங்கிதுவாம் 

குருதி ஓட்டம் முடுக்குங் கிழங்கிதுவாம் ; 

குருதி அணுக்கள் பெருக்கும் கிழங்கிழுவாம் 

குருதிச் சோகை அழிக்குங் கிழங்கிதுவாம் ; 

குருதி நாளங் காக்குங் கிழங்கிதுவாம் 

 குருதி அழுத்தம் மடக்குங் கிழங்கிதுவாம் ; 

மருந்தாய்ப் பயன்கள் ஈணுங் கிழங்கிதுவாம் 

மலத்தின் சிக்கல் அறுக்குங் கிழங்கிதுவாம் !

 


குடலின் புற்றின் அணுக்கள் ஒழித்திடுமாம் 

கொல்லும் உணவுக் குழலின் புற்றகற்றும் ; 

உடலில் கணையப் புற்றைத் துரத்திடுமாம் ; 

உடலின் வேர்வை வாடை விரட்டிடுமாம் ; 

உடலில் செரித்தல் சீராய் இயக்கிடுமாம் 

உருட்டும் வயிற்றுப் போக்கை நிறுத்திடுமாம் ; 

நடக்கும் கால்கீழ் வெடிப்பு மறைத்திடுமாம் 

நன்மை மழையாய்ப் பொழியுங் கிழங்கிழுவாம் !

                                                                   - இராதே

களாக்காய்

 களாக்காய் ( 83 ) 



 அடிவயிற்றின் வலியைப் போக்கும் 

 ஆட்டமிடும் அழற்சி நீக்கும் ; 

துடிக்கின்ற இதயத் தசைகள் 

 துடிப்பாக்க வலிமை கூட்டும் ; 

கடிபல்லின் ஈறில் தொடர்ந்துக் 

 கசிகின்ற குருதி நிறுத்தும் ; 

நொடிப்பொழுதில் மூளைத் திறனின் 

 நுட்பங்கள் உயர்த்துங் களாக்காய் ! 

 


கருவிழியின் படலப் பிணியைக் 

 கண்டித்தே கட்டுப் படுத்தும் 

கருப்பையின் அழுக்கைக் கழுவக் 

 களாக்காயின் வேரே உதவும் ; 

கரும்புள்ளி, தோலின் அரிப்பு 

காதடைப்பு, காற்றின் தொல்லை 

அருகியே ஓட்டம் பிடிக்கும் 

 அருமருந்துக் காயே களாக்காய் ! 



 குடற்புண்கள் , காய்ச்சல் மறையும் 

 குமட்டல்கள் ,வீக்கம் குறையும் ; 

உடலிலுள்ளத் தொற்றின் பரவல் 

 உடனடியாய் மாய்த்து விரட்டும் ; 

உடல்பித்தம் மெல்லத் தணிக்கும் 

 உட்புறத்தில் உறுப்பைக் காக்கும் ; 

அடங்காத வேட்கைத் துரத்தும் 

 அளவோடே தின்போம் களாக்காய் ! 


                                                      -இராதே

விண்மீன் சோம்பு

 விண்மீன் சோம்பு (82) (அன்னாசிப் பூ) 



 மரத்தின் உலர்ந்த பழமே 

 மணக்கும் விண்மீன் சோம்பு ; 

நரம்பின் வளத்தைக் காக்கும் 

 நன்றாய்த் தூக்கங் கொடுக்கும் ; 

அரற்றுந் தொண்டைப் புண்ணை 

 ஆற்றும் விண்மீன் சோம்பு ; 

மிரட்டும் மலத்தின் சிக்கல்

    மீட்கும் விண்மீன் சோம்பு ! 



 நீச்ச இனிப்பு நோயை 

 நீக்கத் துணையாய் நிற்கும் ; 

மூச்சி ரைப்பு நோய்கள் 

 மூச்சுக் குழல் இருமல் 

ஓச்சுங் காயம் , வீக்கம் 

 உறுத்துங் குடற்சார்ப் புழுக்கள் 

வீச்சுக் கொண்டே அடித்து 

 விரட்டும் விண்மீன் சோம்பு ! 



 காற்றுத் தொல்லைப் போக்கும் 

 காய்ச்சல் , அழற்சி அடக்கும் ; 

தோற்றம் இளமை கூட்டும் 

 துன்ப நுண்மி, பூஞ்சைச் 

சீற்ற மின்றி மடியச் 

 செய்யும் விண்மீன் சோம்பு ; 

ஏற்றம் மிகுந்த மருந்தே 

 என்றும் விண்மீன் சோம்பு ! 


                                                - இராதே

திங்கள், 14 பிப்ரவரி, 2022

அவல்

 அவல் (81) 



 அவலு அவலு அவலுதான் 

 அவித்துக் குத்தித் தட்டையாய் 

அவலாய் மாறும் அரிசிதான் ; 

 அவலுத் தின்னா வலிமைதான் ; 

அவலு ஆற்றும் வயிற்றுப்புண் 

 அவலால் வாய்ப்புண் தீருமே ; 

அவலும் எடையைக் குறைக்குமே 

அவலும் சூட்டைத் தணிக்குமே ! 



 குடலுள் நுழையும் புற்றணுவை 

 குறுக்கே நின்றே தடுக்குமே ; 

குடலுள் நல்ல உயிரிகள் 

 கூடி வாழ உழைக்குமே ; 

குடலில் நோயின் எதிர்ப்பாற்றல் 

 கொட்டிக் காக்கும் அவலுதான் ; 

உடலை உறுதி யாக்கிடும் 

 உயர்ந்த உணவே அவலுதான் ! 



 எதையுந் தாங்கும் இதயத்தை 

 எளிதில் காவல் செய்யுமே ; 

சிதையும் அணுக்கள் புத்துணர்வுச் 

 செறிவை ஊட்டும் அவலுதான் ; 

வதைக்கும் சீதக் கழிச்சலை 

 மறித்து நிறுத்தும் அவலுதான் ; 

உதவும் மருந்துப் பண்பிலே 

 உறையும் அவலை உண்ணுவோம் ! 


                                                            - இராதே

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நெய்

 நெய் 



 பாலினது பெயரன் நெய்யாம் 

 பயன்கள் கொடுப்பதும் மெய்யாம் ; 

மூலிகை அணுக்கள் சுவரில் 

 முந்தியே கலப்பதும் நெய்யாம் ; 

தோலினது பிணிகள் போக்கும் 

 தோன்றிடும் தழும்பை மறைக்கும் ; 

மேலிடும் நினைவின் ஆற்றல் 

 மேம்பட வைப்பதும் நெய்யாம் ! 



 கல்லீரல் கொழுப்பின் அமிலம் 

 கரைத்தாற் றலாக்கும் நெய்யாம் ; 

மல்லுக்கு நிற்கும் நுண்மி 

 மடித்திடச் செய்யும் நெய்யாம் ; 

தொல்லைகள் தணிக்கும் தீப்புண் 

 தீர்த்துப்புண் ஆற்றும் நெய்யாம் ; 

கொல்லும்நோய் எதிர்ப்புச் சக்திகளின் 

கூட்டிடும் மருந்தும் நெய்யாம் ! 



 துல்லியக்கண் பார்வைத் தெளியும் 

தூய்மையாய்க் குருதிச் சுழலும் ; 

மெல்லிய நரம்பைத் தூண்டி 

 மேன்மையாய் மூளைச் சிறக்கும் ; 

ஒல்லியாய் உடலைத் திருத்தும் 

 உழலும்நீ ரிழிவுத் தடுக்கும் ; 

எல்லாமும் வழங்கும் நெய்யை 

 எப்போதும் அளவாய் உண்போம் ! 



                                                - இராதே

செங்கிழங்கு

 செங்கிழங்கு (79) (பீட்ரூட்)



 பார்வையும் திறனுற மேம்படுமே 

 பரவிடும் புற்றணு ஒழிந்திடுமே ; 

மார்பகப் புற்றுநோய்த் தவிர்த்திடுமே 

மனத்திடை அழுத்தத்தைக் குறைத்திடுமே ; 

ஆர்வமாய்ச் சிவப்பணு பெருக்கிடுமே 

அடைத்திட எழுங்கொழுப்பை அகற்றிடுமே ; 

சோர்வினைத் தீர்த்துடுமே செங்கிழங்குச் 

சோம்பலை முறித்திடுமே செங்கிழங்கு ! 

 


குருதியின் அழுத்தங்கள் சீர்ப்படுமே 

 குருதியின் சோகையும் மறைபடுமே ; 

குருதியில் கழிவுகள் நீக்கிடுமே 

 குருதியில் இனிப்புநோய்ச் சமப்படுமே ; 

சுருக்கங்கள், தோல்நோய்கள் விடுபடுமே 

சுடரென முகஅழகும் வெளிப்படுமே ; 

நெருக்கிய கல்லீரல் நோய்த்தகருமே 

நிறைவான மருந்துணவே செங்கிழங்கு ! 

 


பித்தப்பைச் சிறுநீர்ப்பை நோயோட்டுமே 

பெருங்குடற்புண் ,கொப்பளங்கள் ஆற்றிடுமே ; 

பித்தவாந்திப் பக்கவாதம் விரட்டிடுமே ; 

பெருத்திடும் உடல்எடையை வடித்திடுமே ; 

புத்துணர்வு ஊட்டியே உடலேற்றுமே 

புரைநோய்கள், மறதியைப் புறந்தள்ளுமே ; 

நித்தமும் நலப்பயன்கள் வாரியிறைத்தே 

 நேர்பட உணவாகுஞ் செங்கிழங்கே !


                           - இராதே

தான்றிக்காய்

 தான்றிக்காய் (78) 



 தான்றிக் காயாந் தான்றிக்காய் 

 தடுக்குஞ் சிலந்தி 'விடம்'தடுக்கும் ; 

ஊன்றிப் பார்க்கும் கண்நோய்கள் 

 ஒழங்காய்த் தீர வழிகாணும் ; 

தோன்றுந் தொண்டைக் கமறல்கள் 

 துரத்திக் குரலை வளப்படுத்தும் ; 

ஆன்ற மருந்தாய் அணிவகுத்தே 

 அனைத்துங் காக்குந் தான்றிக்காய் ! 



 வயிற்றுள் நெளியும் புழுக்களும் 

 வளரும் குடலுள் புழுக்களும் 

வயிற்றுப் போக்கும், பொருமலும் 

 மறந்தும் வராமல் நிறுத்திடுமே ; 

மயிர்க்கால் உதிர்தல் அகற்றிவிடும் 

 மலத்தை இளக்கி விலக்கிவிடும் 

உயிரை எடுக்கும் மூச்சழற்சி 

 உறுத்தல் தவிர்க்குந் தான்றிக்காய் ! 



 உடலைத் தேற்றி ஒளியேற்றும் 

 உருட்டுஞ் சளியை அறுத்துவிடும் ; 

குடலுள் நுண்மிக் கொன்றுவிடும் 

 குருதி மூலம் மட்டுப்படும் 

தொடரும் வாந்தி, நாவறட்சித் 

 தொல்லை எல்லாம் ஓடிவிடும் ; 

கடமை யாற்றி நமதுடலைக் 

 காக்குங் காயாந் தான்றிக்காய் !


                                                   - இராதே

பட்டை இலை

 பட்டை இலை (77) (பிரிஞ்சு இலை) 



 தூக்க மின்மைப் போக்கித் 

 தூக்கம் நன்றாய்க் கொடுக்கும் ; 

தாக்கும் புற்றின் அணுக்கள் 

 தடுத்து வளர்ச்சி அழிக்கும் ; 

ஊக்கப் படுத்தி மனத்தின் 

 உளைச்சல் அழுத்தம் விடுக்கும் ; 

வீக்கம் கண்டால் குறைக்கும் 

 வேட்கைத் தணிக்கும் இலைகள் ! 



 நீங்கும் குடலின் நோய்கள் 

 நிற்கும் வாந்தி , காய்ச்சல் ; 

ஓங்கும் பக்க வாதம் 

 ஒழித்து விரட்டி யடிக்கும் ; 

தேங்குங் கெட்டக் கொழுப்பைத் 

 தீர்த்துக் கட்டி மாய்க்கும் ; 

பாங்காய் இதயம் இயங்க 

 பக்க துணையாம் இலைகள் ! 



இரைப்பு நோய்கள் மாளும் 

 எதிர்க்கும் ஆற்றல் மூளும் ; 

உரத்தப் பசியைத் தூண்டும் 

 உதிரும் முடியைத் தடுக்கும் ; 

உரைக்குங் கைகால் வலிகள் 

 ஒடுக்கி அடக்கும் இலைகள் ; 

திரண்ட நலன்கள் அளிக்கும் 

 சிகரம் பட்டை இலைகள் ! 


                                          - இராதே

சனி, 12 பிப்ரவரி, 2022

முட்டைக்கோசு

 முட்டைக்கோசு (76) 



 ஊட்டந் தருமாம் முட்டைக் கோசு 

 ஓங்கிக் கிட்டும் நோயெ திர்ப்பு ; 

ஆட்டம் போடும் புற்றின் அணுக்கள் 

 அருகித் தோன்றா வண்ணங் காக்கும் ; 

சூட்டைத் தணிக்கும், மூலம் ஒழிக்கும் 

 சுணங்கும் மலத்தின் சிக்கல் அறுக்கும் ; 

கேட்டை விளைக்கும் குடற்புண் ஆற்றும் 

கெடுதல் தொற்றை விரட்டித் துரத்தும் ! 


கண்ணின் புரைகள், பார்வை மங்கல் 

 கருணை யுடனே தீர்க்குங் கோசு ; 

எண்ணம் முடக்கும் மறதி நோய்கள் 

 எளிதில் விடுத்து நினைவைப் பெருக்கும் ; 

உண்ணும் உணவின் செரித்தல் சிறக்கும் 

உடலின் எடையை ஒழுங்காய்க் குறைக்கும் ; 

திண்ண மாக எலும்பும் மாறும் 

 திண்மை வலிமை பல்லில் கூடும் ! 



 தோலின் வறட்சி நீக்குங் கோசு 

 துடிக்கும் நரம்பின் தளர்ச்சி விலக்கும் ; 

தோலின் பொலிவை மிளிரத் தூண்டும் 

 தூய்மை செய்து குருதிச் செழிக்கும் ; 

தோலில் வழியும் வியர்வைப் போக்கித் 

தொக்குங் கழிவை அகற்றித் தள்ளும் ; 

வேலிப் போல உடலைக் காத்து 

 வேண்டும் பயன்கள் கொடுக்குங் கோசு ! 


                                                           -இராதே

முந்திரி

 முந்திரி (75) 



 முந்திரி பருப்பே பழமாம் 

 முழுக்க நன்மை தருமாம் ; 

முந்திடும் புற்றின் அணுக்கள் 

 முன்னமே கிள்ளி எறியும் ; 

தந்திடும் நல்லக் கொழுப்பைத் 

 தாக்கிடுங் கெட்டக் கொழுப்பை ; 

உந்திடும் இதய நலத்தால் 

 உயிரினை மீட்கும் பருப்பாம் ! 



 கருவிழிப் படலங் காக்கும் 

 கண்ணறை முதிர்வைத் தடுக்கும் ; 

இருள்நிற முடிகள் செழிக்கும் 

 இளநரை முடிகள் மறையும் ; 

குருதியின் அழுத்தம் அடக்கும் 

 குருதியில் இனிப்பைச் சுருக்கும் ; 

அருட்கொடை ஈணும் பருப்பாம் 

 அழற்சிகள் வீழ்த்தும் பருப்பாம் ! 



 'கப்பலை வித்தாங் கொட்டை ' 

காரணப் பெயரும் உண்டாம் ; 

செப்பமாய்ப் பசியைக் குறைக்கும் 

 செவ்வன எடையை இறக்கும் ; 

அப்பிடும் ஊதாக் கதிர்கள் 

 அண்டாமல் தோலைத் தேற்றும் ; 

முப்பகை வெல்லும் மருந்தாம் 

 முந்திரி பருப்பே விருந்தாம் ! 


                                                 - இராதே

இலந்தைப்பழம்

 இலந்தைப் பழம் (74) 



நல்ல தூக்கம் தூங்கலாம் 

 நமக்கே இலந்தைப் பழந்தரும் ; 

பொல்லாப் பித்த நோய்களைப் 

 புரட்டிப் போட்டே தணித்திடும் ; 

உள்ளே மனத்தின் உளைச்சலை 

 ஒடுக்கி அமைதிப் படுத்திடும் ; 

மெல்லும் பற்கள் வலுப்படும் 

 மேனித் தோலும் ஓளிவிடும் ! 



 குருதிக் குழலின் இறுக்கத்தை 

 கூட நின்றே தளர்த்திடும் ; 

குருதி யோட்டம் நெறிப்படும் 

 குருதி அணுக்கள் மிகுந்திடும் ; 

குருதி அழுத்தம் உயர்ந்தெழக் 

 குறைத்தே இதயங் காத்திடும் ; 

பெருகும் வாந்தித் தலைச்சுற்றல் 

 பெருக்கம் அடக்கும் இலந்தைதான் ! 



 உடலின் எலும்புந் திடப்படும் 

 உடலின் சூடோ சமப்படும் ; 

உடலின் வலிகள் மறைந்திடும் 

 உடனே செரித்தல் நிகழ்த்திடும் ; 

உடலில் நரம்பு மேம்படும் 

 உறங்கும் பசியை உசுப்பிடும் 

உடலைக் காக்க ஓய்வின்றி 

 உழைக்கும் பழமே இலந்தையாம் ! 


                                                       - இராதே

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

வெங்காயம்

 வெங்காயம் (73)  



கார நெடியில் கண்களைக் 

 கலங்க வைக்கும் வெங்காயம் ; 

ஈரல் அழற்சி,மூக்கெரிச்சல் 

 இருமல், பித்த ஏப்பமும் 

தீர வழிகள் நல்கிடும் 

 சிறுநீர்க் கற்கள் கரைத்திடும் ; 

மார டைப்பைத் தடுத்திடும் 

 மனத்தின் இறுக்கம் விலக்கிடும் ! 



 பித்த நீரின் சுரப்படக்கும் 

 பிரியுஞ் சிறுநீர்த் தொற்றடக்கும் ; 

நித்தங் குருதி ஓட்டத்தை 

 நெறியாய்ப் பாய்ச்சிச் சீராக்கும் ; 

மொத்த கணையக் கழிவுகளை 

 வெளியே தள்ளி நோயெதிர்க்கும் ; 

செத்துப் போகுங் கண்ணறைகள் 

 திரும்பும் பிழைக்க வழிவகுக்கும் !



வெட்டுக்  காயம் ஆற்றிடும்

     வெப்பந் தணிந்தே உடல்குளிரும் ;

கொட்டுங் குளவி விடந்தணிக்கும் 

 கொழுப்பைக் கரைத்தே அகற்றிவிடும் ; 

சொட்டும் இளமை மீட்டெடுக்கும் 

 துடிக்கும் இதய தோழனவன் 

கட்டுக் கடங்கா மூட்டுவலி 

 கட்டுப் படுத்தும் வெங்காயம் !


                                              - இராதே 


 (கண்ணறைகள் : செல்)

குடைமிளகாய்

 குடைமிளகாய் (72) 



 இளமை கூட்டுங் குடைமிளகாய் 

 எடையைக் குறைக்கும் குடைமிளகாய் ; 

வளருங் கூந்தல் நலங்காக்கும் 

 வறட்சித் தோலை மெருகேற்றும் ; 

அளவாய்க் குருதி அழுத்தத்தை 

 அடக்கி இதய வளம்பேணும் ; 

உளைச்சல் கொடுக்கும் புற்றுநோய் 

 உருவா காமல் தடைசெய்யும் ! 



 வீக்கம் , எலும்புள் மூட்டுவலி 

 விரைந்தே ஓட வழிகாட்டும் ; 

நேக்காய் இரைப்பைச் செரிமநீர் 

  நிறைத்துச் செரித்தல் எளிதாக்கும் ; 

தேக்க மாகும் மலச்சிக்கல் 

 சீராய் இளக்கிச் சரியாக்கும் ; 

ஊக்க மளித்தே நோயெதிர்க்கும் 

 உணர்வைத் தூண்டும் குடைமிளகாய் ! 



 மண்டை ஓட்டில் குருதிநீர் 

 வாகாய்ப் பாய்ந்தே செழிப்பூட்டும் ; 

தொண்டை நோயுஞ் சளித்தொல்லைத் 

 துரத்தி விடியல் தந்துவிடும் 

அண்டும் பொடுகை வெறியேற்றும் 

 அரற்றுங் காற்றைப் பிரித்தோட்டும் ; 

தொண்டாய் உவந்து மருந்தளிக்கும் 

 தோழமை உணவே குடைமிளகாய் !


                                             - இராதே

நூல்கோல்

 நூல்கோல் (71)  

நூக்கல் என்பதே நூல்கோல் 

 நுகருங் காயே நூல்கோல் 

தாக்கும் புற்று நோய்கள் 

 தகர்க்கும் உணவே நூல்கோல் ; 

காக்கும் எதிர்ப்புத் திறனைக் 

 கடிதே வழங்கும் நூல்கோல் ; 

போக்கும் வியர்வை வாடை 

 பொறுப்பாய் இதயம் பேணும் ! 




 நீங்கும் மலத்தின் சிக்கல் 

 நீங்கும் உடலின் கழிவு ; 

தாங்கும் எலும்பும் வலுக்கும் 

தசைகள் வலிமை பெருக்கும் ; 

தேங்குங் கெட்டக் கொழுப்பைத் 

 தேடிப் பிடித்தே அகற்றும் ; 

ஓங்கும் உடலின் எடையை 

 ஒழுங்காய்க் குறைக்கும் நூல்கோல் ! 




 'தடிப்புத் தோலின் அழற்சி' 

 தமனிச் சுவரின் கொழுப்பாம் 

அடித்தே துரத்தும் இதனை 

 அரிய மருந்தே நூல்கோல் ; 

வெடிப்பு மேல்தோல் வறட்சி 

 விரட்டித் தீர்க்கும் நூல்கோல் ; 

துடிப்பாய் உடலை இயக்கும் 

 தூதன் நமது நூல்கோல் !


                             - இராதே

புதன், 9 பிப்ரவரி, 2022

காராமணி

 காராமணி (70)  



தட்டைப் பயிறே காராமணி 

 தருமே நலன்கள் காராமணி ; 

கெட்ட நச்சுக் கழிவினையும் 

 கேடு விளைக்குங் கொழுப்பினையும் 

ஒட்ட நறுக்கி வாலறுக்கும் 

 ஒழித்துக் கட்டி வேரறுக்கும் ; 

கட்டுக் கடங்கா நீரிழிவைக் 

 கட்டுப் படுத்துங் காராமணி ! 



 உடலில் நோயின் எதிர்ப்பாற்றல் 

 ஓங்கச் செய்யுங் காராமணி ; 

உடலின் சோர்வை உடன்மாற்றும் 

 உடலில் எலும்பை வலுவேற்றும் ; 

உடலில் தோலைக் காத்துநின்றே 

 ஊதாக் கதிரின் வீச்செதிர்க்கும் ; 

உடலின் சோகை விரட்டிவிடும் 

 உறக்கம் கொடுக்குங் காராமணி ! 



 புதிய திசுக்கள் உருவாக்கும் 

 புரளும் புற்றின் அணுவழிக்கும் ; 

குதிக்கும் இளமை மீட்டெடுக்கும் 

 குருதித் தமனி அடைப்பெடுக்கும் ; 

அதிகக் காற்றைப் பெருக்கிவிடும் 

 அதனால் தொல்லை மிகுந்துவிடும் ; 

அதிக மாக உண்ணாமல் 

 அளவாய்க் கொள்வோம் காராமணி !


                                                - இராதே

அவகோடா பழம்

 அவகோடா பழம் (69) 



அவகோடா பழமே பழமே 

 அள்ளியள்ளிக் கொடைகள் தருமே ; 

தவமாக உடலைக் காக்கும் 

 தாய்சேயின் நலனைக் காக்கும் ; 

கவலையுறும் உடலின் பருமன் 

 கட்டுடலாய்க் குறைத்துக் காக்கும் ; 

துவலுகிற தேய்ந்த எலும்பைத் 

 தூண்போல வலிமை சேர்க்கும் ! 



 மூட்டுவலி, வாயின் நாற்றம், 

 முகவிழியின் பார்வைத் தொய்வு, 

வாட்டுகிற குருதி அழுத்தம், 

 வறட்சித்தோல் நோயின் சீற்றம், 

கூட்டியெழுங் குருதி இனிப்பு, 

 குளிர்விடுமாம் புற்று நோய்கள் 

ஆட்டுவிக்கும் அனைத்துப் பிணியும் 

 அவகோடா பழமே நீக்கும் ! 



 சிறுநீரின் தடங்கள் தடைகள், 

 சிறுநீர்ப்பைக் கற்கள் அடைப்பு, 

சிறுநீர்ப்பைச் சிக்கல் யாவும் 

 தீர்த்திடு மா மருந்து பழமாம் ! 

பெறுகின்ற பேறு கால 

 பெருமயக்கம் , வாந்தி தடுக்கும் ; 

அறுத்தழிக்கும் நோயின் வினைகள் 

 அவகோடா பழமே பழந்தான் ! 


                                                         - இராதே

ஓமம்

 ஓமம் (68)  

மூக்கடைப்பு விலக்கும் ஓமம் 

 மூச்சிரைச்சல் போக்கும் ஓமம் ; 

மூக்கொழுக்கு நிறுத்தும் ஓமம் 

 மூட்டுவலி அகற்றும் ஓமம் ; 

தாக்குகிறத் தொற்றை அழிக்கும் 

 தங்குகிறக் கொழுப்பைக் கரைக்கும் ; 

தேக்குமரம் போலே உடலைத் 

 தேற்றுகிற உணவே ஓமம் ! 



 குடலிரைச்சல் குடற்புண் தடுக்கும் 

 குமுறுகிற இருமல் ஒடுக்கும் ; 

உடல்எடை ஏறாமல் இறங்கும் 

 உடனடி செரித்தல் நடக்கும் ; 

இடர்தருக் காற்றைப் பிரிக்கும் 

 இயல்பாகப் பசியைத் தூண்டும் ; 

படபடக்குங் குருதி அழுத்தம் 

 பதறாமல் தாழ்த்தும் ஓமம் ! 



 வளர்க்காய்ச்சல் அடக்கும் ஓமம் 

 வயிற்றுப்புண் வலிகள் ஆற்றும் ; 

வளர்சிதை மாற்றம் நிகழ்த்தும் 

 வயிற்றினுள் பொருமல் நீக்கும் ; 

கிளைத்திடும் எருவாய்க் கடுப்பு 

 கிள்ளியே எறியும் ஓமம் ; 

வளமாக நன்மை புரியும் 

 மணமான மருந்தே ஓமம் ! 


                                     - இராதே

கடுகு

 கடுகு (67)



கடுகுக் கடுகுக் கடுகுதான் 

 கார முள்ள கடுகுதான் ; 

எடுக்கும் விக்கல், புளியேப்பம்

    எதிர்த்துத் துரத்துங் கடுகுதான் ; 

அடுக்கும் இருமல் தொல்லையை 

 அடக்கி நிறுத்துங் கடுகுதான் ; 

ஒடுங்கா ஒற்றைத் தலைவலி 

 ஒடுக்கி விலக்குங் கடுகுதான் ! 



 உடலின் பருமன் குறைத்திடும் 

 உடலில் வெப்பங் கூட்டிடும் ; 

உடையும் கோடைக் கட்டிகள் 

 உப்பும் வயிற்றைச் சுருக்கிடும் ; 

அடைக்கும் மூக்கைத் திறந்திடும் ; 

 அடர்ந்த சளியை முறித்திடும் ; 

குடைச்சல் , வலிகள் ஓட்டிடும் 

 குறுகுஞ் சிறுநீர்ப் பெருக்கிடும் ! 



 குருதிக் கொழுப்பை அகற்றிடும் 

 குருதித் தூய்மைக் காத்திடும் ; 

குருதி அழுத்தம் சமப்படும் 

 குருதி அணுக்கள் மேம்படும் ; 

பெருகும் எலும்பின் உறுதியும் 

 பிதற்றுங் காய்ச்சல் தணிந்திடும் ; 

நெருடும் நோய்கள் ஓட்டிடும் 

 நேர்மை நண்பன் கடுகுதான் ! 


                                                    - இராதே

சோம்பு

 சோம்பு (66) 



புத்துணர்வு ஊட்டுஞ் சோம்பு 

 புதுத்தெம்பைக் கூட்டுஞ் சோம்பு ; 

சத்துக்களின் சங்கம் சோம்பு 

தசைவலிகள் விரட்டுஞ் சோம்பு ; 

அத்துமீறும் நச்சுக் கழிவை 

 அடியோடே வெளியே தள்ளும் ; 

எத்தனைநோய் எதிரே வரினும் 

 எழுச்சியுடன் எதிர்க்குஞ் சோம்பு ! 



 கண்பார்வை மங்கும் பிணியும் 

 கண்டநேர பசியுந் தீர்க்கும் ; 

அண்டிநிண்டும் ஈரல் நோய்கள் 

 அகன்றுவிழிப் பிதுங்கி ஓடும் ; 

மண்டைக்குள் மூளைத் திறத்தை 

 மடைத்திறந்த நீராய் உயர்த்தும் ; 

முண்டிமுட்டுங் காற்றுச் சிக்கல் 

 முழுவதுமாய் விலக்குஞ் சோம்பு ! 



 வாய்நாற்றம் போக்குஞ் சோம்பு 

 வயிற்றுவலி நீக்குஞ் சோம்பு ; 

தாய்ப்பாலைச் சுரக்க வைக்கும் 

 தணியாத சூட்டைத் தணிக்கும் ; 

தூய்மையுறுங் குருதிச் செந்நீர் 

 தூக்கமது நன்றாய்த் தழுவும் ; 

தேய்வில்லா நலன்கள் பகிரும் 

 தேர்ந்தநல் உணவாஞ் சோம்பு ! - இராதே

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

பச்சைப் பட்டாணி

 பச்சைப் பட்டாணி (65) 



 பதைக்கும் மனநோய்த் தீர்த்துவிடும் 

 பார்வை இழப்பைத் தடுத்துவிடும் ; 

சொதப்புங் குருதிச் சோகையினைச் 

 சுணக்க மின்றி மாற்றிவிடும் ; 

சிதைக்குங் கெட்டக் கொழுப்பதனைச் 

சிதைத்தே வெளியில் தள்ளிவிடும் ; 

எதையுந் தாங்கும் இதயத்தை 

 என்றுங் காக்கும் பட்டாணி ! 



 அறிவின் கூர்மை எழுச்சியுறும் 

 அழகாம் இளமை வளமையுறும் ; 

குறிப்பாய் வயிற்றுப் புற்றுநோய்க் 

 குறைத்தே உடலும் செழுமையுறும் ; 

தெறிக்கும் வயிற்றுப் பிணிகளுமே 

 துரத்தி அடிக்கடித் துன்பமுறும் ; 

மெறிக்குங் காற்றுச் சிக்கலினை 

 மெல்ல அவிழ்க்கும் பட்டாணி ! 



 பச்சை மணியாய்ப் பட்டாணி 

 பதமாய் எலும்பு நோய்விடுக்கும் ; 

அச்சங் கொடுக்கும் மலச்சிக்கல் 

 அடங்கி ஒடுங்கி இளகிவிடும் ; 

குச்சி உடம்புச் சதைப்பிடித்தே 

 குண்டாய் மாற வழிவகுக்கும் ; 

உச்சப் பயன்கொள் மருத்துவத்தை 

 ஒழுங்காய் அருளும் பட்டாணி ! 


                                               - இராதே

பட்டை

 பட்டை (64) 



 மறதி நோய்க்கு மருந்து 

 மணக்குங் கிராம்புப் பட்டை ; 

திறமை யாக சளியைத் 

 தீர்த்துக் கட்டும் பட்டை ; 

உறையுங் குருதித் தடுக்கும் 

 ஒழியும் பூஞ்சைக் காளான் ; 

நிறைந்த எதிர்ப்புச் சக்தி 

 நிறுவுங் கிராம்புப் பட்டை ! 



 திணறும் இருமல் அடக்கும் 

 திடமாய்த் தசையை இறுக்கும் ; 

உணர்த்தும் மூட்டு வலியை 

 ஓட விடும் பட்டை ; 

மணக்க வாயைக் கழுவும் 

 மாயும் நெஞ்சின் எரிச்சல் ; 

மனத்தின் பதற்றம், அழுத்தம் 

 மட்டுப் படுத்தும் பட்டை ! 



 குருதிப் புற்று மறையும் 

 குருதி ஓட்டஞ் செழிக்கும் ; 

குருதிக் கெட்டக் கொழுப்பைக் 

 குறைத்துக் கரைத்து நீக்கும் ; 

குருதி இனிப்பின் அளவைக் 

 குறுக்கிக் கட்டுப் படுத்தும் ; 

பெருகும் உடலில் நன்மை 

 பெரிதும் ஊட்டும் பட்டை ! 



                                               - இராதே

கருப்பட்டி

 கருப்பட்டி ( 63 ) 



மேனி மினுக்கக் கருப்பட்டி 

 மெல்ல பசியைத் தூண்டிவிடும் ; 

தேனீப் போல சுறுசுறுப்பைத் 

 திரட்டிக் கொடுக்குங் கருப்பட்டி ; 

சீனி நோயைத் சீர்ப்படுத்தும் 

 சீறுங் காற்றை அடக்கிவிடும் ; 

கூனிக் குறுகி நோயெல்லாம் 

 குனிந்து வணக்கம் போட்டோடும் ! 



 நோயின் எதிர்ப்புத் திறன்கூடும் 

 நுட்பக் கருப்பை வளங்கூடும் ; 

தாயின் பாலும் மிகச்சுரக்கும் 

 தாக்குஞ் சளியும் மட்டுப்படும் ; 

வாயில் பற்கள் வலிமையுறும் 

 வறட்சி இருமல் நீங்கிவிடும் ; 

பாயில் வீழுந் துன்பங்கள் 

 படர விடாதே கருப்பட்டி ! 



 சுண்ணம் இரும்புச் சத்துகள் 

 சூழ்ந்த இனிப்பே கருப்பட்டி ; 

வண்ண எழிலை உடல்பெறவே 

 வாகாய்க் குருதித் தூய்மைச்செய்யும் ; 

கண்ணுங் கருத்து மாகவே 

 காக்கும் எலும்பைக் கருப்பட்டி ; 

எண்ண மெல்லாம் ஈடேற்றும் 

 இனிப்பு மருந்தாங் கருப்பட்டி ! 


                                                   - இராதே

திங்கள், 7 பிப்ரவரி, 2022

கடுக்காய்

 கடுக்காய் (62)  



மிடுக்காய் நடக்கக் கடுக்காய் 

 மீட்கும் இளமை துடுக்காய் ; 

அடுக்காய் நன்மை வார்க்கும்

    'அமுதம்' என்னும் கடுக்காய் ; 

தொடுக்கும் நோய்கள் தோற்கும் 

 தொல்லை பித்தம் எதிர்க்கும் ; 

இடுக்கண் கண்நோய்த் தீர்க்கும் 

 இருமல் , சோகை மாய்க்கும் ! 



 குடலின் புழுக்கள் நசியும் 

 குடலின் கழிவுகள் நழுவும் ; 

உடலின் கட்டி மறையும் 

 உடலில் வலிமை நிறையும் ; 

உடலின் மெலிவு நீங்கும் 

 உடலில் அழகுத் தேங்கும் ; 

இடறும் மூல நோயும் 

 இல்லா தாக்குங் கடுக்காய் ! 



 வளரும் வயிற்றுப் புண்கள் 

 வாட்டி வதைக்கும் வாய்ப்புண், 

இளகா மலத்தின் சிக்கல் 

 எல்லாம் விரட்டுங் கடுக்காய் ; 

இளமை யுடனே வாழ 

 என்றும் உண்போம் கடுக்காய் ; 

வளமாய் உடலை மாற்றும் 

 வரங்கள் ஈணும் கடுக்காய் ! 


                                                 - இராதே

துளசி

 துளசி ( 61 ) 



 துளசி நல்ல துளசி 

 துன்பந் துரத்துந் துளசி ; 

உளவுப் பார்க்கும் தொற்றை 

 உடலை விட்டே விரட்டும் ; 

தளரும் நரம்பை முறுக்கித் 

 தரமாய் ஊக்கங் கொடுக்கும் ; 

வளரும் பருக்கள் மாய்க்கும் 

 வாட்டுங் காய்ச்சல் போக்கும் ! 



 குருதித் தூய்மை மீட்கும் 

 குருதி இனிப்பைக் தடுக்கும் ; 

சுருங்குந் தோலை விரிக்கும் 

 சொரியும் அரிப்பும் விலகும் ; 

சிறுநீர்த் தொற்று நீங்கும் 

 செழுமைப் பார்வை வழங்கும் ; 

அறுக்குஞ் சளியை ஒழிக்கும் 

 அரிய மருந்தே துளசி !  



கெட்ட வியர்வை நாற்றக் 

 கேடு மடிய வைக்கும் ; 

முட்டும் இருமல் ஒடுக்கும் 

 முந்தும் எடையைக் குறைக்கும் ; 

எட்டுங் குருதி அழுத்தம் 

 ஏற்ற இறக்கந் தடுக்கும் ; 

கட்டுப் படுத்தி மனத்துள் 

 களிப்பை யூட்டுந் துளசி ! 


                                             - இராதே

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

எள்

 எள் 



 எள்ளின் பயன்கள் ஏராளம் 

 எள்ளோ உடலைக் குளிர்விக்கும் ; 

எள்ளே கண்ணின் ஒளிக்கூட்டும் 

 எள்ளால் வெப்பப் புண்ணாறும் ; 

எள்ளோ அறிவுத் தெளிவூட்டும் 

 எள்ளால் முகமும் பொலிவடையும் ; 

எள்ளே சோர்வை வெளியேற்றும் 

 எள்ளால் காது வலிக்குறையும் ! 



 சீண்டும் சிரங்குந் தோல்நோயும் 

 சீற்றம் மழுங்கி ஓடிவிடும் ; 

தீண்டுந் தொற்று நோயெதிர்க்கும் 

 தீரா மூலந் தீர்த்துவிடும் ; 

மூண்ட மண்டைச் சூட்டினையும் 

 முழுதுந் தணித்துச் சரிசெய்யும் ; 

நீண்ட கால மலச்சிக்கல் 

 நீக்கி நிறைவைத் தரும்எள்ளே ! 



 குருதி இனிப்பு நீரிழிவுக் 

 குறைக்கும் பயிறே எள்ளேயாம் ; 

குருதி ஓட்டஞ் சீராக்கிக் 

 கொடுக்கும் வலிமை உடலேற்றும் ; 

நெருடுங் குடலின் நோய்விடுத்து 

 நித்தம் உடலை ஊக்குவிக்கும் ; 

அருமை எள்ளே நல்லெண்ணெய் 

 ஆகி நமக்கு பயன்படுதே !


                                              - இராதே

கொள்ளு

 கொள்ளு  



கொள்ளுக் கொள்ளுக் கொள்ளு 

 கொழுப்பைக் கரைக்குங் கொள்ளு ; 

கொள்ளுக் கோழை அகற்றும் 

 கொள்ளுக் காய்ச்சல் போக்கும் ; 

கொள்ளுப் புரதம் ஊட்டும் 

 கொள்ளு எடையைக் குறைக்கும் ; 

கொள்ளு உணவைக் கொண்டே 

 குவிப்போம் பயன்கள் நூறு ! 



 கரையுஞ் சிறுநீர்க் கற்கள் 

 கரையுங் குருதிக் கட்டு ; 

விரைந்து நோயை எதிர்க்கும் 

 விலகும் மூல நோயும் ; 

உரைக்கும் பசியைத் தூண்டும் 

 ஒடுங்கும் கண்ணின் அழற்சி ; 

இரைப்பு மூச்சுச் சிக்கல் 

 எளிதில் தீர்க்கும் கொள்ளு ! 



 கொள்ளுக் குடற்புண் ஆற்றும் 

 கொள்ளுப் புழுக்கள் நீக்கும் ; 

கொள்ளு வெப்பம் ஏற்றும் 

 கொள்ளுத் தொந்திச் சுருக்கும் ; 

கொள்ளு வாதம் விரட்டும் 

 கொள்ளு உடலைத் தோற்றம் ; 

கொள்ளே உணவு மருந்து 

 குடும்ப நலத்தின் விருந்து ! - இராதே

தக்காளி

 தக்காளி 



 நலன்கள் புரியுந் தக்காளி 

 நாளும் உண்ணுந் தக்காளி ; 

புலன்கள் தூண்டிச் சுறுசுறுப்பைப் 

 புகுத்தும் பழமே தக்காளி ; 

உலர்த்தி வயிற்றுப் புண்ணாற்றும் 

 உறுத்துந் தொற்றை ஒழித்துவிடும் ; 

மலரும் முகத்தை அழகேற்றும் 

 மருந்தாம் உணவுத் தக்காளி ! 



 சிறுநீர் எரிச்சல் நீர்க்கடுப்புச் 

 சீர்மைப் படுத்தி நலங்காக்கும் ; 

உறுமும் சிரங்குத் தோல்புண்ணை 

 உதறி ஓட்டித் தோல்காக்கும் ; 

இறுகும் மலத்தை இளக்கிவிடும் 

 இனிப்பு நீர்க்குத் தடைநிற்கும் ; 

குறுகும் பார்வைக் கூர்மையுறும் 

 குருதிப் பெருக்கம் எழுச்சியுறும் ! 



 உடலின் வீக்கம் வடித்துவிடும் 

 உடலின் வெப்பம் தணித்துவிடும் ; 

உடலின் எடையைக் குறைத்துவிடும் 

 உடலின் வலிமை பெருக்கிவிடும் ; 

திடமாய்ப் பற்கள் உறுதியுறும் 

 திருக நரம்பும் முறுக்கேறும் ; 

கடமை தீரன் தக்காளி 

 காக்கும் வீரன் தக்காளி ! 

                                                       - இராதே

கொண்டைக் கடலை

 கொண்டைக் கடலை 



 கொட்டும் முடியைத் தடுக்கும் 

 குருதி இனிப்பைக் விடுக்கும் ; 

சொட்டும் சிறுநீர் ஒடுக்கும் 

 தோன்றும் புற்றை முடக்கும் ; 

கட்டி வளர்ச்சி அடக்கும் 

 கடுக்கும் வலிகள் குறைக்கும் ; 

பட்டுக் கன்னம் மின்னப் 

 பயனாம் கொண்டைக் கடலை ! 



 புரதம் , நீரின் சத்து 

 புகட்டுங் கொண்டைக் கடலை ; 

விரட்டும் வயிற்றுப் பொருமல் 

 விரைந்து ஓட்டுங் கடலை ; 

மிரட்டும் பல்லின் வலியை 

 மீட்குங் கொண்டைக் கடலை ; 

திரளும் மருந்தை உணவாய்ச் 

 சீராய்த் தருமே கடலை ! 



 குடலின் நலன்கள் பெருக்கும் 

 குருதி அழுத்தம் இறக்கும் ; 

திடமாய் எலும்பை மாற்றும் 

 செரித்தல் இயல்பாய் நடக்கும் 

சுடராய் மூளை ஒளிரும் 

 சுணங்கும் நரம்பு மிளிரும் ; 

அடடா கொண்டைக் கடலை 

 அளிக்கும் பயன்கள் பாரேன் ! 


                                          - இராதே

சனி, 5 பிப்ரவரி, 2022

பதநீர்

 பதநீர் 



 பனையின் பாளைச் சீவிடப் 

 பரவி நுனியில் வடியும்நீர் ; 

பனையின் பாளை நீருக்குப் 

பதமாய்ச் சுண்ணம் கலந்திடப் 

பனையின் பதநீர்க் கிடைக்குமே 

 பருக இனிப்பாய்ச் சுவைக்குமே ; 

பனையின் பதநீர் உடலினைப் 

 பார்த்துப் பார்த்துக் காக்குமே ! 



 உடலுங் குளிர்ச்சி அடைந்திடும் 

 உடலின் மெலிதல் சீர்ப்படும் ; 

இடறும் மூலச் சூட்டினை 

 இதமாய்க் கடுமை தணித்திடும் ; 

படரும் புண்கள் கொப்பளம் 

 பற்கள் ஈறு சிக்கலும் 

தொடர விடாமல் தடுத்திடும் 

 தொண்டின் சிகரம் பதநீரே ! 



 தேயும் எழும்பும் தேறிடும் 

 சிறுநீர்க் கடுப்பும் மாறிடும் ; 

பாயும் வியர்வை அகற்றியே 

 படியுங் கழிவை விலக்கிடும் ; 

மாயும் மலத்தின் சிக்கலும் 

 மயக்கும் சோர்வுந் தீர்ந்திடும் ; 

நோயும் நொடியும் மாய்த்திடும் 

 நுகர்வோர் மகிழும் பதநீரே ! 


                                              - இராதே

வாதுமைப் பழம்

 வாதுமைப் பழம் ( பாதமி ) 



 காவி, மஞ்சள் நிறத்துடன் 

 களிக்கும் இனிப்புச் சுவையுடன் 

மேவி இதயங் காத்திடும் ; 

 மேன்மை மருந்துத் தரத்துடன் 

தாவி நலன்கள் புரிந்திடும் 

 தகுந்த பழமே வாதுமை ; 

ஆவி உள்ள வரையிலும் 

 அருந்தி நோய்கள் வெல்லுவோம் ! 



 கண்ணின் நீரைப் பெருக்கியே 

 கண்ணின் வறட்சிப் போக்கிடும் ; 

நுண்மை மூளைக் கண்ணறைகள் 

 நுணக்க வளர்ச்சிச் செறிவுறும் ; 

திண்மை கூட்டி எலும்பிற்குள் 

 திரட்டி வலிமை ஊட்டிடும் ; 

புண்கள் உறுத்தும் பெருங்குடல் 

 புழங்குந் தொல்லை உதறிடும் ! 



 சிவப்ப ணுக்கள் மேம்படும் 

 சிதையும் சோர்வும் சோகையும் ; 

அவல மிழைக்கும் புற்றணுக்கள் 

 அரண்டுத் துளிர்க்க அஞ்சிடும் ; 

துவளுங் காது வலிகளைத் 

 தூக்கிப் போட்டு மெறித்திடும் ; 

உவக்கும் நன்மை ஈட்டிடும் 

 உவகைப் பழமே வாதுமை !


                                                     - இராதே

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

வெற்றிலை

 வெற்றிலை 



 வெற்றிலை வெற்றிலை வெற்றிலை 

 வேண்டிய நலந்தரு வெற்றிலை ; 

வெற்றிலைத் தீப்புண்கள் ஆற்றுமே 

வெற்றிலைக் காயங்கள் தீர்க்குமே ; 

வெற்றிலை விரட்டிடும் வாய்ப்புண்கள் 

வெற்றிலைத் துரத்திடும் தொண்டைப்புண் ; 

வெற்றிலை வயிற்றுப்புண் தேற்றுமே 

வெற்றிலைப் பொருமலை விலக்குமே !



வெற்றிலை வாய்நாற்றம் போக்குமே 

வெற்றிலைப் புத்துணர்ச்சி யூட்டுமே ; 

வெற்றிலைக் கோழையை அகற்றுமே 

வெற்றிலை மூச்சழற்சி வெல்லுமே ; 

வெற்றிலைக் குரல்வளங் காக்குமே 

வெற்றிலைச் சளியிரும்மல் நிறுத்துமே ;

வெற்றிலைத் தாய்ப்பாலைச் சுரக்குமே 

வெற்றிலை நுண்ணுயிரிக் கொல்லுமே !



 வெற்றிலை எளிதில் செரிக்குமே 

 வெற்றிலை மலச்சிக்கல் நீக்குமே ; 

வெற்றிலைத் தலைவலி ஓட்டுமே 

 வெற்றிலை மூட்டுவலி விடுக்குமே ; 

வெற்றிலை உடல்எடைக் குறைக்குமே 

வெற்றிலைப் பயன்களின் இமையமே ; 

வெற்றிலை உடலநல விருந்தாமே 

 வெற்றிலை நமக்கென்றும் மருந்தாமே ! 

                                                                - இராதே

பிரண்டை

 பிரண்டை  



பிரண்டைக் கொடியாய்ப் படரும் 

 பிணிக்கு மருந்தாய்த் தொடரும் ; 

திரளுஞ் சுளுக்குப் பிடிப்புத் 

 தீராக் கால்கைக் குடைச்சல் 

அரண்டே திணற ஓட்டும் 

 அரிய உணவே பிரண்டை ; 

புரட்டுங் காற்றுப் பிடிப்பும் 

 புலம்பிக் கதறி நழுவும் !  




குருதிக் கசியும் மூலம் 

 குணமாய் ஆக்கும் பிரண்டை ; 

குருதிச் சீராய்ப் பாய்ந்தே 

 கூடும் இதயக் காப்பும் ; 

உருக்கும் எலும்பு நோயை 

 உதறி உடலைத் தேற்றும் 

உருக்குப் போல வலிமை 

 உடனே தருமே பிரண்டை ; 



குடலின் நுண்புழு கொல்லும்

   குடலின் புண்கள் ஆற்றும்

உடலின் மெலிதல் தோற்றம்

   உடைந்த எலும்பைச் சேர்க்கும்

திடமாய் மூளை நரம்பு 

 திகழ வழிகள் காட்டும் ; 

அடர்வாய்ப் புண்கள் , நாற்றம் 

 அகற்றும் கொடியே பிரண்டை ! 


 - இராதே

சாதிக்காய்

 சாதிக்காய் 



 கனிவிதை சாதிக் காயாம் 

 காரமும் துவர்ப்பும் சுவையாம் ; 

நனிப்பட நினைவின் ஆற்றல் 

 நல்கிடும் சாதிக் காயாம் ; 

இனித்திடும் இளமைத் தோற்றம் 

 ஈன்றிடும் சாதிக் காயாம் ; 

முனிந்திடும் மனநோய்த் தீர 

 முனைந்திடும் சாதிக் காயாம் ! 



 முகத்திடைத் தழும்புகள் போக்கி 

 முகத்தினைப் பொலிவாய் ஆக்கும் ; 

அகன்றிடுங் காற்றின் தொல்லை 

 ஆறிடும் அம்மை புண்கள் 

தகர்ந்திடும் படியுங் கொழுப்புத் 

 தளர்ந்திடும் நரம்பும் எழும்பும் ; 

நிகழ்த்திடும் உடல்சார் நன்மை 

 நிறுவிடும் சாதிக் காயே ! 



 அடக்கிடும் வயிற்றுப் போக்கை 

 அடங்கிடா வேட்கை நீக்கும் ; 

முடங்கிடும் மூச்சின் அழற்சி 

 முகிழ்ந்திடும் மனத்துள் மகிழ்ச்சி 

தடைபடும் தூக்கம் மீட்டுத் 

 தந்திடும் சாதிக் காயாம் ; 

விடைபெறும் செரிக்காச் சிக்கல் 

 வித்திடும் சாதிக் காயாம் ! 


                                         - இராதே

வியாழன், 3 பிப்ரவரி, 2022

வாழைக்காய்

 வாழைக்காய் 



 குடலின் கழிவை வெளித்தள்ளும் 

 குடலைத் தூய்மைச் செய்திடுமே ; 

உடலின் எடையைக் குறைத்திடுமே 

 உணர்ச்சிப் பெருக்கைத் தடுத்திடுமே ; 

தொடரும் இருமல், வயிற்றிரைச்சல் 

 தொல்லை மறைய வைத்திடுமே ; 

படருங் கண்ணின் புரைநோயைப் 

 பற்ற விடாமல் முனைந்திடுமே ! 



 குருதி இனிப்பை நிலைப்படுத்தி 

 குருதி அழுத்தம் சமப்படுமே ; 

உருட்டும் மூட்டு வலித்தீர்க்கும் 

 உளைச்சல் மூலம் சரிபடுமே ; 

பெருகும் மூளைச் சுறுசுறுப்பு ; 

 பேணும் இதய நலங்காப்பு ; 

அருகும் முதுமைத் தோற்றமுமே 

 அழகாம் இளமைப் பொலிவுறுமே ! 



 அண்டும் நோயை எதிர்த்திடுமே 

 அடைக்கும் மலத்தைப் புறந்தள்ளும் ; 

நிண்டும் புற்று நோயழிக்கும் 

 நெளியும் எலும்பு வலிமையுறும் ; 

மண்டுந் தொற்றுந் தெறித்தோடும் 

 மலிவு மருந்தாம் வாழைக்காய் ! 

உண்டுப் பயன்கள் பெற்றிடுவோம் 

 ஓங்கும் நலத்தில் மகிழ்ந்திடுவோம் ! 


                                                             - இராதே

முருங்கைக்காய்

 முருங்கைக்காய் 



 முத்து நிறைந்த முருங்கைக்காய் 

 முழுமை யூட்டச் சத்துக்காய் ; 

இத்துப் போன நரம்புகள் 

 எழுச்சிக் காண உதவுங்காய் ; 

அத்து மீறும் மூச்சிரைப்பை 

 அறுத்து விலக்கும் முருங்கைக்காய் ; 

எத்தும் புற்று நோய்களின் 

 இடர்கள் அகற்றும் முருங்கைக்காய் ! 



 குடலின் செயலில் திறனெடுக்கும் 

 குடலில் கட்டி உடைத்தழிக்கும் ; 

உடலின் எலும்பில் அடர்வையேற்றும் 

 உடலில் காசம் விட்டேஓடும் ; 

தடங்கள் ஊன்றும் சோகைநோயும் 

 தளர்ந்தே அஞ்சி மிரண்டேஓடும் 

முடக்கும் பக்க வாதநோயை 

 முற்றுந் தீர்க்கும் முருங்கைக்காய் ! 




 இயற்கை யாக மகப்பேறும் 

 எளிய முறையில் நிகழ்த்திவைக்கும் ; 

உயருந் தாய்சேய் நலவளர்ச்சி 

 உயருந் தாய்ப்பால் சுரக்கவைக்கும் ; 

அயரும் பார்வை மேம்படுத்தும் ; 

 அழற்சி நெஞ்சைச் சரிபடுத்தும் ; 

இயற்கை தந்த கொடையிதாம் 

 இரும்புச் சத்து முருங்கைக்காய் ! 


                                                         - இராதே

புதன், 2 பிப்ரவரி, 2022

மாம்பழம்

 மாம்பழம்  

இளமை அழகை மீட்டெடுக்கும் 

 எழிலாய் உடலை வலுவாக்கும் ; 

வளமை கூடித் தோல்மினுக்கும் 

 மயக்கம் , சோகை மாற்றிவிடும் ; 

அளவாய்க் குருதி ஊற்றெடுக்கும் 

 அரற்றுஞ் சிறுநீர்க் கல்கரையும் ; 

களவுக் கொழுப்பைக் கண்டகற்றும் 

 கனிவு நிறைந்த மாம்பழமாம் ! 



 புற்றந் தொற்றும் மறைந்தேகும் 

 புதிய முறுக்கு நரம்பேறும் ; 

பற்றும் ' மாலைக் கண்'நோயும் 

 பதமாய் நழுவி வெளியேறும் ; 

இற்ற உடலும் எடைகூடும் 

 எகிறும் பசியைக் குறைத்தடக்கும் ; 

முற்றும் ஈரல் கசிவுகளும் 

 முக்கா டிட்ட ஓடிடுமாம் ! 



 தொல்லைக் கொடுக்கும் பல்வலியைத் 

தொடரா திருக்க செய்திடுமாம் ; 

எல்லா உணவும் இயல்பாக 

 எளிதில் செரிக்க வைத்திடுமாம் ; 

பொல்லாக் கண்ணீர் வடிதல்நோய் 

 புலம்பிப் போக வழித்தேடும் ; 

நல்லப் பழமாம் மாம்பழமாம்

    நன்மை பயக்கும் மாம்பழமாம் !


                                                - இராதே

நார்த்தம்

 நார்த்தம் 



வயிற்றுப் புழுக்கள் அழிக்கும் 

 வயிற்றுப் புண்ணை ஒழிக்கும் ; 

உயிரை எடுக்கும் வாந்தி 

 ஓடிப் போகும் இதனால் ; 

உயிரைக் காக்கும் நார்த்தம் 

 உயர்ந்த பழமே நார்த்தம் ! 



 சிறுநீர்க் கற்கள் கரைக்கும் 

 சீறுங் கழிச்சல் நிற்கும் ; 

இறுகும் மலமும் இளகும் 

 எளிதில் சோர்வு விலகும் ; 

இருக்கும் தசைகள் முறுக்கி 

 இயங்கும் உடலைத் தேற்றும் ; 

முறுக்கும் வலிகள் ,சுற்றல் 

 முழுதும் தீர்த்து வைக்கும் ! 



 பித்தம் சூடு தணிக்கும் 

 பிழியுஞ் சாறோ இனிக்கும் ; 

புத்தம் புதிய உணர்வுப் 

 புகுத்தி நலமே சேர்க்கும் ; 

நித்தம் குருதி மாசை 

 நீக்கும் பழமாம் நார்த்தம் ; 

மெத்த நன்மை பயக்கும் 

 மேன்மை நார்த்தம் பழமாம் ! 

                                                   - இராதே

பனங்கிழங்கு

 பனங்கிழங்கு 



பிட்டும் கூழும் ஒடியலிட்ட 

 உணவின் வகையாய்க் கொள்ளலாம் ; 

சுட்டுந் தீயில் கருக்கியும் 

 சுட்ட நீரில் அவித்துமே 

இட்டம் போல தின்னலாம் 

 இனிப்பு நீரை வெல்லலாம் ; 

எட்டும் இரும்புச் சத்துகள் 

 எடுத்து ஊட்டும் பனங்கிழங்காம் ! 



 உருண்டக் கூம்பின் வடிவமாம் 

 உழலுஞ் சோகை ஓட்டுமாம் ; 

திருகும் ஒற்றைத் தலைவலி 

 தீர உதவுங் கிழங்கிதாம் ; 

நெருக்கும் வயிற்று வலியிதனை 

 நீங்க வழிகள் காட்டுமாம் ; 

இறுகும் மலத்தை இளக்கிய 

 இயல்பாய்ப் போக்குங் கிழங்கிதாம் ! 



பனையின் வேரில் தோன்றுமாம் 

 பலத்தை உடலில் கூட்டுமாம் ; 

வினைகள் புரிந்த நோய்களை 

 விரட்டி விரட்டி அடிக்குமாம் ; 

முனைந்தே கருப்பை வளத்தினை 

முன்னம் நின்று வழங்குமாம் ; 

 சினைக்குஞ் சிறுநீர்க் கற்களைச் 

 சீராய்க் கரைத்தே அகற்றுமாம் ! 



                                                          - இராதே

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

நுங்கு

 நுங்கு 


 நுங்கு நல்ல நுங்கு 

 நோண்டித் தின்னும் நுங்கு ; 

தங்கும் குடலின் கழிவைத் 

 தள்ளும் வெளியே நுங்கு 

பொங்கும் அம்மை நோய்கள் 

 போக்குங் குளிர்ந்த நுங்கு ; 

மங்கும் குருதிச் சோகை 

 மாற்ற வல்ல நுங்கு !  



வேர்வைக் கட்டி நீக்கும் 

 வேண்டும் பசியைத் தூண்டும் ; 

சோர்வை முற்றுந் துரத்தும் 

 சோம்பல் முறித்து விரட்டும் ; 

பார்வை நோய்கள் அகற்றும் 

 பாழுங் கொழுப்பைக் கரைக்கும் ; 

நீர்மச் சத்து நுங்கு 

 நேர்த்தி மருந்து நுங்கு ! 



 வேட்கை அடங்க உதவும் 

 வெயிலில் மயக்கம் அறுக்கும் ; 

நுட்பப் புற்றின் அணுக்கள் 

 நுழையா வண்ணந் தடுக்கும் ; 

திட்ப மார்புப் புற்றைத் 

 திடமாய் எதிர்த்து நிற்கும் ; 

நட்பின் உணவாம் நுங்கு 

 நம்மைக் காக்கும் நுங்கு ! 


                                     - இராதே

பெருங்காயம்

 பெருங்காயம் 



காயங் காக்கும் பெருங்காயம் 

 காற்று நோய்கள் நசித்திடுமாம் ; 

மாயம் ஆகுங் கக்குவான் 

 மறையும் பன்றிக் காய்ச்சலுமாம் ; 

நோயாம் இறுகும் மலச்சிக்கல் 

 நொடியில் நீர்த்தே இளக்கிடுமாம் ; 

நேயம் மிகுந்த பெருங்காயம்

  நிறைவைக் கொடுக்கும் பெருங்காயம் ! 



 குருதி ஓட்டம் முடுக்கிடுமாம் 

 குருதி நாளஞ் சீர்படுமாம் ; 

உருட்டுங் குடலின் சுழற்சியினை 

 ஒழுங்குப் படுத்திப் பார்த்திடுமாம் ; 

நெருடும் பசியைத் தூண்டிடுமாம் 

 நெளியுங் குடற்புண் மாய்த்திடுமாம் ; 

அருகும் நுண்மி இதைகண்டே 

அனைத்தும் மீட்கும் பெருங்காயம் ! 



 சினைப்பைக் கட்டி மறைந்திடுமாம் 

 சீர்ப்படும் மார்பின் நெரிச்சலுமாம் ; 

சினைக்கும் தொற்றினைச் சிதைத்திடுமாம் 

சிறப்பாய்ச் செரிக்கத் துணைப்படுமாம் ; 

முனைப்பாய் நிற்குங் கருத்தடைக்கே 

 முந்தித் தருமே உடற்குளிர்ச்சி 

சுனைப்போல் பயன்கள் சுரக்கின்றத் 

துணைவன் நமது பெருங்காயம் !

                                                                    - இராதே

வேர்க்கடலை

 வேர்க்கடலை  



கடலைக் கடலை வேர்க்கடலை 

 காக்கும் நமது முழுவுடலை ; 

உடலின் எடையைச் சமப்படுத்தும் 

 உறையுங் குருதித் தடுத்துவிடும் ; 

தொடருந் தொற்றை எதிர்த்துவரும் 

 தொல்லைச் சளியை நீக்கிவரும் ; 

இடறும் மூச்சுக் குழலழற்சும் 

 ஈழை நோயும் நலமேவும் ! 

 கருப்பைக் கட்டித் தளர்ந்துவிடும் 

 கடுக்கும் வயிற்றைச் சரிசெய்யும் ; 

குருதி ஓட்டஞ் சீரடையும் 

 குருதிப் போக்குங் குணமாகும் ; 

பெருக்கும் மூளை வளர்ச்சியினை 

 பெருகும் நினைவின் ஆற்றலுமே ; 

உருக்கும் எலும்புத் துளைநோயை 

 உடனே தாக்கி வெளியேற்றும் ! 

 நல்லக் கொழுப்பை வளர்த்துவரும் 

 நச்சுக் கொழுப்பைக் கரைத்தழிக்கும் ; 

மெல்ல பித்தக் கல்கரைக்கும் 

 மேனித் தோலோ பளபளக்கும் ; 

அல்லல் மலத்தை இளக்கிவிடும் 

 அன்னைப் பாலைச் சுரக்கவைக்கும் ; 

எல்லா நோயும் அகட்டிவிடும் 

 நல்லக் கடலை வேர்க்கடலை ! 

 - இராதே

கமலாப் பழம்

 கமலாப் பழம்  



உடலை உறுதி ஆக்குமாம் 

 ஊளைச் சதையை நீக்குமாம் ; 

குடலின் புண்கள் ஆற்றுமாம் 

 குடலின் நுண்மி போக்குமாம் ; 

படருந் தோலில் கருமையும் 

 பட்டென் றோடி மறையுமாம் ! 

தொடருந்து கசக்கும் வாயினைத் 

 துரத்தித் தீர்க்கும் கமலாவாம் ! 



 தூக்கம் இன்மை மறைந்திடும் 

 தொற்றுப் பரவல் தணிந்திடும் ; 

ஊக்க மாக நுரையீரல் 

 உழைக்கத் தெம்புக் கூட்டிடும் ; 

வீக்கம் உள்ள ஈறுகள் 

 விரைந்து வாடச் செய்திடும் ; 

தாக்கும் கண்நோய் விடுபட 

 தகுந்த மருந்து கமலாவாம் ! 



 குருதிக் கொழுப்புக் குறைந்திடும் 

 குளிர்ச்சி உடலைத் தழுவிடும் ; 

பெருகும் வயிற்றுப் போக்கினைப் 

 பெருகா வண்ணம் நிறுத்திடும் ; 

பருக்கள் முகத்தின் புள்ளிகள் 

 பதற ஓட்டும் பழமிதாம் ; 

தருமே தரமாய் மருத்துவம் 

 தகுதிப் பழமாம் கமலாவே !

                                                         - இராதே