அவகோடா பழம் (69)
அவகோடா பழமே பழமே
அள்ளியள்ளிக் கொடைகள் தருமே ;
தவமாக உடலைக் காக்கும்
தாய்சேயின் நலனைக் காக்கும் ;
கவலையுறும் உடலின் பருமன்
கட்டுடலாய்க் குறைத்துக் காக்கும் ;
துவலுகிற தேய்ந்த எலும்பைத்
தூண்போல வலிமை சேர்க்கும் !
மூட்டுவலி, வாயின் நாற்றம்,
முகவிழியின் பார்வைத் தொய்வு,
வாட்டுகிற குருதி அழுத்தம்,
வறட்சித்தோல் நோயின் சீற்றம்,
கூட்டியெழுங் குருதி இனிப்பு,
குளிர்விடுமாம் புற்று நோய்கள்
ஆட்டுவிக்கும் அனைத்துப் பிணியும்
அவகோடா பழமே நீக்கும் !
சிறுநீரின் தடங்கள் தடைகள்,
சிறுநீர்ப்பைக் கற்கள் அடைப்பு,
சிறுநீர்ப்பைச் சிக்கல் யாவும்
தீர்த்திடு மா மருந்து பழமாம் !
பெறுகின்ற பேறு கால
பெருமயக்கம் , வாந்தி தடுக்கும் ;
அறுத்தழிக்கும் நோயின் வினைகள்
அவகோடா பழமே பழந்தான் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக