பிரண்டை
பிரண்டைக் கொடியாய்ப் படரும்
பிணிக்கு மருந்தாய்த் தொடரும் ;
திரளுஞ் சுளுக்குப் பிடிப்புத்
தீராக் கால்கைக் குடைச்சல்
அரண்டே திணற ஓட்டும்
அரிய உணவே பிரண்டை ;
புரட்டுங் காற்றுப் பிடிப்பும்
புலம்பிக் கதறி நழுவும் !
குருதிக் கசியும் மூலம்
குணமாய் ஆக்கும் பிரண்டை ;
குருதிச் சீராய்ப் பாய்ந்தே
கூடும் இதயக் காப்பும் ;
உருக்கும் எலும்பு நோயை
உதறி உடலைத் தேற்றும்
உருக்குப் போல வலிமை
உடனே தருமே பிரண்டை ;
குடலின் நுண்புழு கொல்லும்
குடலின் புண்கள் ஆற்றும்
உடலின் மெலிதல் தோற்றம்
உடைந்த எலும்பைச் சேர்க்கும்
திடமாய் மூளை நரம்பு
திகழ வழிகள் காட்டும் ;
அடர்வாய்ப் புண்கள் , நாற்றம்
அகற்றும் கொடியே பிரண்டை !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக