துளசி ( 61 )
துளசி நல்ல துளசி
துன்பந் துரத்துந் துளசி ;
உளவுப் பார்க்கும் தொற்றை
உடலை விட்டே விரட்டும் ;
தளரும் நரம்பை முறுக்கித்
தரமாய் ஊக்கங் கொடுக்கும் ;
வளரும் பருக்கள் மாய்க்கும்
வாட்டுங் காய்ச்சல் போக்கும் !
குருதித் தூய்மை மீட்கும்
குருதி இனிப்பைக் தடுக்கும் ;
சுருங்குந் தோலை விரிக்கும்
சொரியும் அரிப்பும் விலகும் ;
சிறுநீர்த் தொற்று நீங்கும்
செழுமைப் பார்வை வழங்கும் ;
அறுக்குஞ் சளியை ஒழிக்கும்
அரிய மருந்தே துளசி !
கெட்ட வியர்வை நாற்றக்
கேடு மடிய வைக்கும் ;
முட்டும் இருமல் ஒடுக்கும்
முந்தும் எடையைக் குறைக்கும் ;
எட்டுங் குருதி அழுத்தம்
ஏற்ற இறக்கந் தடுக்கும் ;
கட்டுப் படுத்தி மனத்துள்
களிப்பை யூட்டுந் துளசி !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக