இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

எள்

 எள் 



 எள்ளின் பயன்கள் ஏராளம் 

 எள்ளோ உடலைக் குளிர்விக்கும் ; 

எள்ளே கண்ணின் ஒளிக்கூட்டும் 

 எள்ளால் வெப்பப் புண்ணாறும் ; 

எள்ளோ அறிவுத் தெளிவூட்டும் 

 எள்ளால் முகமும் பொலிவடையும் ; 

எள்ளே சோர்வை வெளியேற்றும் 

 எள்ளால் காது வலிக்குறையும் ! 



 சீண்டும் சிரங்குந் தோல்நோயும் 

 சீற்றம் மழுங்கி ஓடிவிடும் ; 

தீண்டுந் தொற்று நோயெதிர்க்கும் 

 தீரா மூலந் தீர்த்துவிடும் ; 

மூண்ட மண்டைச் சூட்டினையும் 

 முழுதுந் தணித்துச் சரிசெய்யும் ; 

நீண்ட கால மலச்சிக்கல் 

 நீக்கி நிறைவைத் தரும்எள்ளே ! 



 குருதி இனிப்பு நீரிழிவுக் 

 குறைக்கும் பயிறே எள்ளேயாம் ; 

குருதி ஓட்டஞ் சீராக்கிக் 

 கொடுக்கும் வலிமை உடலேற்றும் ; 

நெருடுங் குடலின் நோய்விடுத்து 

 நித்தம் உடலை ஊக்குவிக்கும் ; 

அருமை எள்ளே நல்லெண்ணெய் 

 ஆகி நமக்கு பயன்படுதே !


                                              - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக