நூல்கோல் (71)
நூக்கல் என்பதே நூல்கோல்
நுகருங் காயே நூல்கோல்
தாக்கும் புற்று நோய்கள்
தகர்க்கும் உணவே நூல்கோல் ;
காக்கும் எதிர்ப்புத் திறனைக்
கடிதே வழங்கும் நூல்கோல் ;
போக்கும் வியர்வை வாடை
பொறுப்பாய் இதயம் பேணும் !
நீங்கும் மலத்தின் சிக்கல்
நீங்கும் உடலின் கழிவு ;
தாங்கும் எலும்பும் வலுக்கும்
தசைகள் வலிமை பெருக்கும் ;
தேங்குங் கெட்டக் கொழுப்பைத்
தேடிப் பிடித்தே அகற்றும் ;
ஓங்கும் உடலின் எடையை
ஒழுங்காய்க் குறைக்கும் நூல்கோல் !
'தடிப்புத் தோலின் அழற்சி'
தமனிச் சுவரின் கொழுப்பாம்
அடித்தே துரத்தும் இதனை
அரிய மருந்தே நூல்கோல் ;
வெடிப்பு மேல்தோல் வறட்சி
விரட்டித் தீர்க்கும் நூல்கோல் ;
துடிப்பாய் உடலை இயக்கும்
தூதன் நமது நூல்கோல் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக