வாதுமைப் பழம் ( பாதமி )
காவி, மஞ்சள் நிறத்துடன்
களிக்கும் இனிப்புச் சுவையுடன்
மேவி இதயங் காத்திடும் ;
மேன்மை மருந்துத் தரத்துடன்
தாவி நலன்கள் புரிந்திடும்
தகுந்த பழமே வாதுமை ;
ஆவி உள்ள வரையிலும்
அருந்தி நோய்கள் வெல்லுவோம் !
கண்ணின் நீரைப் பெருக்கியே
கண்ணின் வறட்சிப் போக்கிடும் ;
நுண்மை மூளைக் கண்ணறைகள்
நுணக்க வளர்ச்சிச் செறிவுறும் ;
திண்மை கூட்டி எலும்பிற்குள்
திரட்டி வலிமை ஊட்டிடும் ;
புண்கள் உறுத்தும் பெருங்குடல்
புழங்குந் தொல்லை உதறிடும் !
சிவப்ப ணுக்கள் மேம்படும்
சிதையும் சோர்வும் சோகையும் ;
அவல மிழைக்கும் புற்றணுக்கள்
அரண்டுத் துளிர்க்க அஞ்சிடும் ;
துவளுங் காது வலிகளைத்
தூக்கிப் போட்டு மெறித்திடும் ;
உவக்கும் நன்மை ஈட்டிடும்
உவகைப் பழமே வாதுமை !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக