இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 17 ஜூலை, 2012

உன்னை காணாமல் . . .

நீ   குளித்துவிட்டு

வெளியே   வந்தாய்

தேகத்தில்   மகிழ்வாய்ப்

பயணித்த

நீர்த்   திவலைகள்

மண்ணிரங்கியதும்

மரணித்துவிட்டன  !



நீ   சொல்லித்   தந்த

நடையழகில்

"பாஸ்"    ஆகிவிட்டது

அன்னம்  !

ஒளிந்து   பார்த்த

கொக்கும்

பார்டரில்   "பாஸ்" !



வாசனை   உமிழ்ந்த

மல்லிகை

பூரிப்பில்   பூத்து

குலுங்கியது ;

தூரத்தில்  உன்

வருகையைக்

காற்று   சொன்னதும்

காணாமல்   போனது

அதன்

சிரிப்பும்   வெளுப்பும்  !



உன்னோடு

பழகிப்   பழகி

செல்   பேசிகளின்

சிணுங்கள்கள்   கூட

ரசிக்க   முடிகிறது ;

முன்பெல்லாம்

அனாவசியமாய்

கோபப்பட்ட   நான்

இப்போதெல்லாம்

அவசியமாய்

செல்லும்   கையுமாக

காதுகளில்  !




உன்

பாதங்களை   வருடினேன்

மயிலிறகில்

தொட்டதில்   உறைந்து   போய்

விரிய   மறுக்கின்றன

மயிலிறகுகள்  !



நீ   வருவதாய்

என்   காதுகளுக்கு

உன்   கொலுசுகள்

செய்தி   சொன்னது ;

ஆமாம்  என

நாசியும்   நச்சரித்தது

கண்கள்   மட்டும்

அலை   மோதின

உன்னை

காணாமல்  !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக