இராதே

இராதே
eradevadassou

சனி, 21 ஜூலை, 2012

துளிப்பா - 7

  1. வட்டத்   தட்டில்
          வார்த்த   நிலாக்கள்

          இட்லி



     2.  மின்   கம்பியில்

          தூக்கணாங்  குருவிக்  கூடு

         ''ரோப்    கார்''



    3.  இட   ஒதுக்கீடு

         சுடு    காட்டில்

         சாதி



    4.  விரிகிறது   மடிகளில்

         வீரியம்    இழக்கும்   ஆண்கள்

         ''லாப்   டாப்''



    5.  புரளும்   பக்கங்கள்

          புத்தகம்   படிக்கிறது

          காற்று

                            -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக