இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 20 ஜூலை, 2012

துளிப்பா - 5

     வான   வீதி  
     சலவை   விளம்பரம் 
     மின்னல்



பச்சை   விரிப்பு
பதித்த   வைரம்
பனித்துளி



     இருட்டுப்   போர்வை
     நட்சத்திர   ஓட்டைகள்
     வானம்



முந்தும்   முகில்கள்
முட்டல்   முனகல்
இடி



     பால்   நிலவு
     வழிந்து   மறைந்தது
     காருவா



மலைகளின்   மார்பில்
வைரத்   தொங்கல்
அருவி



     கார்   முகிலின்
     கண்   சிமிட்டல்
     மின்னல்



தேனெடுக்க   வண்டுகள்
வரிசையாக
வேலை   வாய்ப்பகம்



               குளிர்கிறதா   முருங்கைக்கு
              அடை  அடையாக
              கம்பளிப்   பூச்சி



தேனூறும்   மலர்கள்
இசையுடன்   வண்டுகள்
உணவகம்


இராதே-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக