இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கம்பும் வரகும்

கம்பு  வரகு  கதிர்களைக்
          கசக்கித்  தூற்றி  மணிகளாய்த்
தொம்பைப்  பெட்டி  நிரப்புவோம் ;
          தூய  மணிகள்  உலர்த்துவோம் ;
தெம்பு  கொடுக்கும்  பரல்களைத்
          திரட்டிச்  சுவைத்து  மகிழுவோம் ;
நம்பி  உண்ணும்  உணவிது
          நலமே  சேர்க்கும்  உணவிது !


உரலில்  இட்டு  மணிகளை
           உலக்கை  யாலே  குத்துங்கள் ;
சரள  மாக  மாவுமே
          சலிக்க  நமக்குக்  கிடைத்திடும் ;
திரளும்  மாவைச்  சேமித்துத்
          தினுசு  தினுசாய்ச்  சமைக்கலாம் ;
தரமே  மிகுந்த  உணவிது ;
          தருமே  நாளும்  சத்திது !


கஞ்சி  கூழு  காய்ச்சலாம் ;
          கலியும்  புட்டும்  செய்யலாம் ;
நஞ்சு  நல்கா  உணவிது ;
          நல்ல  ஊட்ட  உணவிது ;
கெஞ்சிக்  கொஞ்சிச்  சொல்கிறோம் ;
          கேடில்  லாத  உணவிது ;
அஞ்சி  டாமல்  உண்ணுங்கள் ;
          அருமை  உடலைக்  காத்திடும் !
                                                                             -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக