இராதே

இராதே
eradevadassou

புதன், 6 நவம்பர், 2013

சிட்டு

சிட்டு  சிட்டுக்  குருவி ;
            சின்ன  சிட்டுக்  குருவி ;
பட்டுப்  போல  மேனி ;
            பார்க்க  அழகு  ராணி ;
குட்டிக்  குட்டிச்  சிறகு ; 
            குலுங்க  விரி யும்  இறகு ;
கொட்டும்  அலகால்  தின்னும் ;
            கொத்திக்  கொத்தி  உண்ணும் !


அல்லும்  பகலும்  தேடும் ;
            அரிய  உணவை  நாடும் ;
நெல்லின்  மணிகள்,  பயிர்கள்
            நெளியும்  புழுக்கள்,  உயிர்கள்
மெல்ல  குஞ்சிற்  கூட்டும் ;
            மேன்மை  தாய்மை  காட்டும் ;
நல்ல  சிட்டுக்  குருவி ;
            நன்மை  பயக்கும்  குருவி !


செல்லும்  போதே  பேசும் ;
            செயலில்  கதிர்கள்  வீசும்
''மல்லல்''  நிறைந்த  கருவி ;
            மடியும்  சிட்டுக்  குருவி ;
கொல்லும்  சூழல்  விடுத்து
            குருவி  அழிவைத்  தடுத்து
தொல்லை  இன்றிக்  காப்போம் !
            துயர  றுத்து  மீட்போம் !
                                                                 -இராதே
                                                                   

மல்லல்= வலிமை
                                                                      -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக