இராதே

இராதே
eradevadassou

புதன், 27 நவம்பர், 2013

பூரான்

     கொட்டும்  மழையின்  காடுகளில்
               குடும்பங்  கண்டு  வாழ்ந்திருக்கும் ;
     கட்டுக்   கட்டாய்  உடலிருக்கும் ;
               கட்டுக் (கு)  இரண்டு  காலிருக்கும் ;
     முட்டுந்  தலையில்  உணர்விழைகள்
               முந்தி  நீண்டே  அசைந்திருக்கும் ;
     தட்டும்  இரையில்  நச்சூட்டித்
               'தாடைக்  காலி '  பிசைந்துண்ணும் !


     முன்னும்  பின்னும்  ஊர்ந்தோடும் ;
               முதுகில்  எலும்பே  இருக்காது ;
     பின்னே  நெளியும்  பகுதியில்
               பிறப்பைப்  பெருக்கும்  உறுப்பிருக்கும் ;
     கன்னங்  கரிய  நிறமுண்டாம் ;
               கறுப்பும்  சிவப்பும்  கலப்புண்டாம் ;
     எண்ணும்  போதே  உடற்சிலிர்க்கும் ;
               இயற்கை  படைப்பே  பூரான்கள் !
                                                                                            -இராதே



 'தாடைக்  காலி ' = பூரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக