இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஆந்தை


வட்ட  வடிவ  வெண்முகம்
          வளைந்த  கூனல்  அலகுடன்
கொட்டக்  கொட்ட  விழிப்புடன்
          கூர்மை  வாய்ந்த  நகத்துடன்
எட்டுத்  திசையும்  திரும்பிடும்
          இயல்பாய்ச்  சூழலுங்  கழுத்துடன்
திட்ட  மிட்டே  இரவிலே
          திரியும்  பறவை  ஆந்தையார் !


பாழ  டைந்த  வீட்டிலே
          பழைய  கோட்டை  வாசலில்
ஆழ  மான  கிணற்றிலே
          அசையும்  மரத்தின்  பொந்திலே
சூழ  வாழும்  ஆந்தையார்
          சூழலுங்  கண்கள்  கொண்டவர் ; 
வாழ  உணவாய்  எலிகளை
          வயலில்  வேட்டை  யாடுவார் !                                                

!


உழவுத்  தொழிலின்  நண்பனாய்
          உண்பார்  வெட்டுக்  கிளிகளை
இழவு  சொல்லும்  பறவையாய்
          இழிவாய்  உலகம்  காணுதே ;
பழகும்  மூட  நம்பிக்கை
          பழியில்  ஆந்தை  அழியுதே ;
அழகாம்  இயற்கை  படைப்பினை
          அழித்தி  டாமல்  போற்றுவோம் !
                                                                                    -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக