இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 12 நவம்பர், 2013

சேவல்

சிவப்புக்   கொண்டை   சேவல் ;
          செய்யும்   எழுப்பும்   ஏவல் ;
உவகைக்   குரலில்   கூவல் ;
          ஊரின்   நல்ல   காவல் ;
துவங்கும்   காலை   தாவல் ;
          துரத்தும்   பெட்டை   ஆவல் ;
கவரும்   நெல்லின்   தூவல் ;
          கண்டு   கொத்தும்   சேவல் !

                                                                      -இராதே




மோனை , சாணை

மரபு   பாட்டில்   மோனை ;
          மயக்க   இசைக்கும்   வீணை ;
மதிலின்   மீது   பூனை ;
          மண்டி   யிடுது   யானை ;
வடிக்க   சோற்றுப்   பானை ;
          வரிசை   யாக   சேனை ;
வண்டு   குடிக்கும்   தேனை ;
          வாளைத்   தீட்டும்   சாணை !
                                                                        -இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக