இராதே

இராதே
eradevadassou

வெள்ளி, 13 டிசம்பர், 2024

வண்டு கொண்டாட்டம் !


 உருப்படி


                   எடுப்பு


வண்டுகொண் டாடுதே ! தமிழ்த்தே

நினைக்குடித்துக் களித்துக் குதித்தே 

( வண்டு )


                தொடுப்பு


பண்டு பண்பாடுந் தாய்மொழி யின்னருஞ்

சுவைதனை மாந்தியே மொய்த்தாடி (வண்டு )


                      முடிப்பு


கூறுங் குறள்மக ரந்தங்கள் பூட்டி

   குலுங்குமி சைச்சந் தங்களைக் கூட்டி

ஊறு மிளக்கண மேன்மையை மீட்டி

    ஓங்கு சங்கஇலக் கியங்க ளூட்டி 

( வண்டு )


மூத்தத் தொல்காப்பிய வாடை நுகர்ந்து

   முத்தமி ழேழிசைப் பாடல் பகர்ந்துக்

காத்திடுஞ் செம்மொழி பாவியம் முகந்துக்

   கன்னித் தமிழு யிராசை உகந்து

 ( வண்டு )


தூய அன்னைத்தமி ழாளத் துணிந்துத்

   தொன்மை தமிழர்கள் பெருமை அணிந்துத்

தாய்மொழி வெறுக்கும் வேட்கை தணிந்துத்

   தமிழ்த்தமிழ்த் தமிழென மெத்தப் பணிந்து. ( வண்டு )

                                      - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக