உருப்படி
எடுப்பு
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமடா - தோழா (எதை)
உடன்எடுப்பு
பதைப்பதேன் விழிமலர்
இமைகளை விரிக்க
பரப்பதேன் நண்பா
பழகிடச் சிரிக்க ( எதை )
தொடுப்பு
கதையும் இசையும் ஆனோம் பிரித்தே
எதையுஞ் சிதைத்தால் இன்பமில்லை யென்பாய்
இதயத்துள் நுழைந்தே ஆளும் அன்பாய்
எப்படியும் வெல்வாய் இணைத்தெழும் பண்பாய் ( எதை )
முடிப்பு
விதையும் மரமாய் விளைந்திடும் அறிவாய்
விளக்கவா வேண்டும் விரைந்துநீ கொள்வாய்
புதையும் வரையிலும் மண்ணிலே நட்பாய்
புழங்க வேண்டும் உயிர்வழித் துணையாய் ( எதை )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக