உருப்படி
எடுப்பு
தமிழன் வாரானோ - உயிர் நேர்த்
தமிழைத் தாரானோ
தொடுப்பு
தமிழெழிலினை மொழிமரபினை உடனெறி செய்தே உலகை யாண்ட ( தமிழ)
முடிப்பு
பேச முன்னில்லானோ - மொழிக்கொருப்
பேரன்பைச் சொல்லானோ ;
ஆசையாய்க் கொள்ளானோ - பகைவர்தம்
ஆற்றலை வெல்லானோ
ஒசையெனும் பல
தாள மிசைதரு
வேந்தர்க்கு வேந்தன்
தமிழ்மொழி நேயன் ( தமிழ )
பேசி ஆவதில்லையே - நமக்கொருப்
பேரி ழப்புமில்லையே ;
கூசிக் குன்றோமில்லையே - நம்மேற்
குற்ற மொன்றுமில்லையே
பூசலும் ஏசலும்
மாண்டிடச் செய்தமிழ்
வண்ண மொழிதனைச்
சூடிய மாறன் ( தமிழ )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக