இராதே

இராதே
eradevadassou

திங்கள், 23 டிசம்பர், 2024

பகை




சாவேரி                        ரூபகம்


                      எடுப்பு


பகையினை விடு மனமே - படு

பாழ் வினை மேவ எல்லாமும்செயும் நேர்ப்      ( பகை )


                     தொடுப்பு


வகைவகை உணர்வெழு முன்சினமாம் - சிந்தை

வானி லெழுங் கெடு மாம தியாளும்               ( பகை )


                        முடிப்பு


நகைமுகந் திரிந்திடுமே - நாளும்

நல்வினை அறுந்திடுமே

மிகைபட உழன்றிடுங் கெடுநினைவும் - நித்தம்

மிதிபட ஊரெங்கும் நின்றே நிண்டும்           ( பகை )

                     -  இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக