இராதே

இராதே
eradevadassou

வியாழன், 5 டிசம்பர், 2024

வெண்சங்கே ஊது !

 உருப்படி


    வெண்சங்கே ஊது !


                  எடுப்பு


சங்கே ஊதூது ! - வெண்

சங்கே ஊதூது !


                 தொடுப்பு


எங்கும் இன்பம் தங்கும் என்றே - நம்பும்

எல்லோர் நினைவும் 'சள்ளை' என்றே  (சங்கே )


                    முடிப்பு


தூங்கும் நள்ளிரவில் - உயர்

வெள்ளம் புகுந்தே

இல்லம் நிறைத்தே

உள்ளம் வருத்தியதே !


தேங்கிய செந்நீரும் - எம்

உடைமை சிதைத்தே

கெடுமை கொடுத்தே

கொடுமை நிகழ்த்தியதே !


தாங்கும் மனநிலையும் - துயர்

மெல்லத் துருத்தி

கள்ளம் வகுத்தே

அல்லல் படுத்தியதே !


ஓங்கும் வலிகளிலும் - வினை

மிஞ்ச நகைத்தே

நெஞ்சம் வதைத்தே

வஞ்சம் செய்ததென  ( சங்கே )


                               - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக