உருப்படி
எடுப்பு
காசாண்டித் திமிர்கண்டு நீயேண்டி மருள்கொண்டாய்க்
காண்பதற் கழகாகுமோ ? (காசா)
தொடுப்பு
வீசாண்டி எச்சைக்கையை வெறுப்பாண்டி ஏழைகளை
வீழ்த்தாட விளையாடி வம்பாடு வாண்டி ( காசா )
முடிப்பு
நண்பர்க்கும் நஞ்சையூட்ட நாணப்பட மாட்டாண்டி
நல்லவன் வேடமிட்டே நாடகங்கள் நடிப்பாண்டி
காண்பதெல்லாம் பணமாக்கக் கயமைகள் புரிவாண்டி
கள்ளமிகு தில்லுமுல்லால் காசுப்பார்க்கத் துடிப்பாண்டி (காசா )
ஈரத்து ணியிலிட்டே கழுத்தினை அறுப்பாண்டி
ஈவிறக் கமின்றியே வட்டிவிட்டே பிழைப்பாண்டி
பேரும்பு கழுங்காண பித்தலாட்டம் போடுவாண்டி
பெரியம னிதர்போர்வை யிலேசுற்றித் திரிவாண்டி (காசா)
சாதிச மயம்பேசிக் குழப்பங்கள் விளைப்பாண்டி
சந்திலே சிந்துபாடி சகலமும் அடைவாண்டி
வீதியில் பதாகைகள் வைத்தின்பங்கள் கொள்வாண்டி
விளம்பரப் பித்தாகிப் பெருமைகள் பீத்துவாண்டி ( காசா )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக