இராதே

இராதே
eradevadassou

திங்கள், 23 டிசம்பர், 2024

படித்ததைக் கேளும்




           (தண்டகம்)


               எடுப்பு


படித்ததைக் கேளுமம்மா !


                முடிப்பு


படித்ததை என்ன என்பேன் ?

    பாவலர் பாட - நன்றாளும்

    நாவலர் கூட !

முடித்த அப்பணி நண்ணிய 

    முனிவோர்த் தேட - செம்மொழி

    மகிழுற ஆட !        ( படி )


மெய்யென் றொருக்கால்

    மேலுமே தூக்கி - அஞ்சிகின்றவர்

    அச்சங்கள் போக்கி !

பொய்யெனக் கூறியப்

    புல்லரை நீக்கி - மாந்தருக்கும்

    மாண்பினைப் பெருக்கி !    ( படி )


மேதகு தீந்தமிழ் ஏற்றிட வல்ல

    மின்னெழில் மொழியை நிலந்தனில் நல்ல

தீதிலாத் தமிழரும் அணிந்துமே செல்ல

    தேன்'நா' பொழிகிற வணக்கமே சொல்ல      ( படி )

                  - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக