இராதே

இராதே
eradevadassou

வியாழன், 19 டிசம்பர், 2024

தமிழ் எங்கே ?


 உருப்படி


               எடுப்பு


எங்கேநீ இருக்கிறாயோ ? தமிழே ! - இங்குளோர்க்

கேதும் தெரிய வில்லையே ?   ( எங்கே )


               தொடுப்பு


எங்குதா னினி காண்போ  மோஅம்மா ?

   ஏவும் அம்மா

அங்கேவந் துன்னையே

   ஆவலாய்ப் போற்றவே          ( எங்கே )


                முடிப்பு


நாட்டினிலோ ? 'நா'விளை யாட்டினிலோ ? - மொழி

     நாட்டத்திலோ ? - சொல்தரும்

     ஊட்டத்திலோ ? - நன்புலவோர்க்கொடை

ஏட்டினிலோ ? கொள்கை கூட்டினிலோ ? - மாப்புகழ்

     ஈட்டத்திலோ ? நீட்டத்திலோ ?

மேட்டிமையாம் மொழிஆங்கில மேஉயி ராகப்பேணும்

     வேடிக்கைமாந் தரின்னிலை

     வேரறுக்க வழிகளைத்

தீட்டியத் தூயோர் மீட்பினிலோ ? கூறுமம்மா

     தீங்கு மேவாப்

     பொற்றாளைப் போற்றவே           ( எங்கே )


                   - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக