இராதே

இராதே
eradevadassou

திங்கள், 23 டிசம்பர், 2024

தமிழர் விழா




                    எடுப்பு 


செந்தமிழர் மகிழும் பெருவிழா

தீந்த மிழாளுமிந்தப் பெரும்பொங்கல் விழா      ( செந்த )


                 தொடுப்பு


தைமகள் நலங் கூட்ட வளர்க்கும் பெருவிழா

   தமிழர்க்கு மேன்மைகள் சேர்க்கும் பெருவிழா

வெய்யோன் கதிரோனைப் போற்றும் விழா

   வீரத் தமிழ்மறவர் நெகிழும் விழா

தைதனில் கொண்டாடும் உழவர் விழா

   தன்னிகரில்லாதத் தமிழர்த் திரு விழா    ( செந்த )


                  முடிப்பு


அன்புடன் ஏர் உழவர் உழைப்பதும் சேர்ந்திருந்தே

   அழகுடன் பயிர்செய்த நெல்லும் தரு விருந்தே

இன்னுயிர் அனைத்தையும் ஏற்றிடுந் திருநாள்

   ஏரிலாடும் நிலம்பயிரெழு மெனத்திகழ்

     ஓசையோடு நாட்டிடும் பெருமை நிறை              ( செந்த )


                   - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக