உருப்படி
எடுப்பு
கொட்டும்பனிப் பொழிந்தே - தமிழா
கொட்ட மடிக்குதடா ! (கொட்டு )
தொடுப்பு
'பட்டெ'னும் புல்வெளியில் - துளிகள்
படர்ந்தெழி லூட்டிடுதே - தமிழா
சுடரொளிக் கூட்டிடுதே ! ( கொட்டு )
முடிப்பு
வெள்ளைத் துகள்பரவி - திரை
வெள்ளை விரித்ததுபோல் - தமிழா
உள்ளும் மகிழ்வினிலே - இன்பந்
துள்ளிப் பெருகுதடா - நெஞ்சம்
மெல்ல உருகுதடா ! ( கொட்டு )
பரவும் வெண்பனியில் - உடல்
பதுங்கத் துடிக்குதடா - தமிழா
பார்க்குந் திசையெல்லாம் - அழகுப்
பளிங்குத் தெறிக்குதடா - மின்னும்
ஒளி,கண் பறிக்குதடா ! ( கொட்டு )
அள்ளும் பனித்துருவல் - மேலே
அடித்து விளையாடி சறுக்கிப்
பிடிக்கத் தூண்டுதடா - நடுங்கி
நடிக்கத் தூண்டுதடா - பண்
படிக்கத் தூண்டுதடா ! ( கொட்டு )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக